"எதிர்பார்த்தது 20 கோடி... அள்ளியது 52 கோடி!"

வருமானவரிச் சோதனையில் சிக்கிய கல்லூரிகள்!ரெய்டு

கோடீஸ்வரர் ராஜகோபாலிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை அள்ளி ஒரு பண மலையை அம்பலப்படுத்தி இருக்கிறது வருமானவரித் துறை.

ஸ்ரீபாலாஜி கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. ஒரு மருத்துவ சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம்வரை வசூல் செய்வதாகப் பெற்றோர்கள் தரப்பில் புகார்கள் பறந்தன. அதைத் தொடர்ந்தே சோதனை செய்ய உத்தரவிட்டது இந்திய மருத்துவ கவுன்சில். இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24-ம் தேதி ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது வருமானவரித் துறை.

கல்லூரிகளின் தலைவர் ராஜகோபாலின் செயலர்களான சூர்யநாராயணன் மற்றும் ஆஷா, ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியின் பி.ஆர்.ஓ ஜெரால்டு ஆகியோர் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஜெரால்டு வீட்டில் கட்டைப்பைகளில், அட்டைப் பெட்டிகளில் ஆயிரம் ரூபாய் பணக்கட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அதிகாலையில் தொடங்கிய இந்தச் சோதனை மாலை 6 மணிவரை நடந்தது. சோதனைத் தகவல் அறிந்து வீட்டில் இருந்த ஜெரால்டு முன்கூட்டியே தலைமறைவானார். இரவு எட்டு மணியளவில் பணக்கட்டுகள் அடங்கிய 38 அட்டைப் பெட்டிகளையும், ஒரு துணிப் பையையும்  எஸ்.பி.ஐ வங்கியிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அன்றைய தினமே திருப்போரூர் சத்யசாய் மருத்துவக் கல்லூரியிலும், வேளச்சேரியில் அதன் தலைமை அலுவலகத்திலும் நடந்த சோதனைகளில் சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள பணமும், ஆவணங்களும் சிக்கின. இரண்டாவது நாளாகக் கல்லூரியின் தலைவர் ராஜகோபாலின் வீடு மற்றும் ஈ.சி.ஆரில் இருக்கும் அவரது மகன் பிரசாந்தின் வீடுகளைச் சோதனையிட்டதில் ஆவணங்களும் கணக்கில் வராத 10 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்