மிஸ்டர் கழுகு: 500 கோடி?

“நான் சொன்னதுபோலவே இளங்கோவன் ராஜினாமா செய்துவிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைமை மாற்றம் உறுதியாகிவிட்டது” என்று சொன்னபடியே வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘காங்கிரஸ் கட்சியில் என்னதான் நடக்கிறதாம்?” என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி  வெற்றிபெற்று விடக் கூடாது என்று காங்கிரஸ் பிரமுகர்களே சாமியைக் கும்பிட்டார்கள். அப்படி நடந்தால்தான் இளங்கோவன் மீது பழியைப் போட்டு அவரைத் தூக்க முடியும் என்று நினைத்தார்கள்.

இளங்கோவன் நீங்கலாக மற்ற ஒட்டுமொத்த கோஷ்டித் தலைவர்களும் இளங்கோவன் மீது கணைகளை வீசத் தொடங்கிவிட்டார்கள். தங்கபாலு, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் டெல்லி தலைமையி்டம் இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்கள். எல்லா விஷயங்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் இளங்கோவன், இந்த விஷயத்தில் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார். ப.சிதம்பரம் தரப்பினர் கடந்த 10 தினங்களுக்கு முன்பே டெல்லியில் சோனியா மற்றும் ராகுலை சந்தித்து இளங்கோவனை மாற்றவேண்டும் என்ற வலியுறுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இளங்கோவனும் டெல்லி சென்று மூன்று நாட்கள்  தங்கினார்.  சோனியா மற்றும் ராகுலை சந்தித்துத் தன் தரப்பு விளக்கத்தைக் கொடுத்தார். ஆனால் இவர் விளக்கம் இரண்டு பேருக்குமே திருப்தி இல்லை என்கிறார்கள்.”

 ‘‘ஓ!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்