"முதல்வர்... அமைச்சர் பெயரை ஏன் போடவில்லை?"

அதிகாரியை அடித்த ஆளும் கட்சியினர்!

ர்ச்சைகளில் வலியப் போய்ச் சிக்குவதில் அலாதியான ஆர்வம் கொண்டவராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாறிக்கொண்டு இருக்கிறார்.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, ‘சிவகாசி ராமசாமி என்பவரை கொலை செய்துவிடுவேன்’ என்று செல்போனில் மிரட்டி சர்ச்சையில் சிக்கினார். தேர்தலில் வென்றதும், வில்லிபுத்தூர் கோயில் யானையை தனக்கு மாலை போடவைத்து மன்னர்போலக் காட்டிக்கொண்டார். இதோ, அடுத்த சர்ச்சை. அரசு அதிகாரி ஒருவரை அடித்த பின்னணியில் அமைச்சர் பெயரும் அடிபடுகிறது.

சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இங்குள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனித் திருவிழா, 10 நாட்களுக்கு மேல் நடக்கும். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் விழாவை நடத்துவார்கள். அதில் அ.தி.மு.க கவுன்சிலர் சீனிவாசனுக்கும் செயல் அலுவலர் முருகனுக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்து கைகலப்பில் முடிந்திருக்கிறது.

கவுன்சிலர் சீனிவாசன், ‘‘திருவிழா தொடர்பான அழைப்பிதழில் முதல்வர் படமும் போடவில்லை. உள்ளூர் அமைச்சரான கே.டி.ராஜேந்திரபாலாஜி படமும் போடவில்லை. வார்டு கவுன்சிலர் என்ற முறையில் எனக்கும் அழைப்பிதழ் தரவில்லை. தகவல் அறிந்த நான் முருகனிடம் அதுபற்றிக் கேட்டதற்கு, ‘உங்களிடம் எல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று திமிராகப் பேசினார். இதில் எங்களுக்குள் வாக்குவாதம்தான் நடந்தது. நாங்கள் அடித்ததுபோல் வேண்டுமென்றே மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார்” என்றார்.

செயல் அலுவலர் முருகன், ‘‘ஆனித் தேரோட்டத் திருவிழா ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. அதற்கான அழைப்பிதழ்கள் மே மாதத்தில் அடிக்கப்பட்டுவிட்டன. அப்போது தேர்தல் நேரம் என்பதால் யார் முதல்வர், யார் அமைச்சர் என்று தெரியாததால் பொதுவாக அழைப்பிதழ்கள் அடித்து எல்லோருக்கும் அனுப்பினோம். அ.தி.மு.க கவுன்சிலர் சீனிவாசனின் சித்தப்பாவும், மண்டகப்படிதாரருமான நாராயணசாமி நாயுடு வழக்கமாக 6-ம் நாள் திருவிழாவை நடத்துவார். ஆனால், அவர் இந்த முறை விழாவை நடத்த முடியவில்லை. எனவே, வேறு ஒருவருக்கு அந்த நாளை ஒதுக்கிவிட்டோம். ஆனால், கவுன்சிலர் சீனிவாசன் இந்த முறை 6-ம் நாள் திருவிழா தன் தந்தை பெரியாழ்வார் நாயக்கர் பெயரில் நடத்த வேண்டும் என்று கூறி பிரச்னை செய்தார். ‘அழைப்பிதழ்கள் எல்லாம் அடித்து எல்லோருக்கும் அனுப்பிவிட்டோம்’ என்று கூறினேன். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சீனிவாசனும், அவருடன் வந்த அமைச்சரின் உதவியாளர் பலராமனும் என்னையும், உதவியாளர் கொம்பையாவையும் பலமாகத் தாக்கினர்” என்றார் கொதிப்புடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்