தோற்றவர்களின் கதை - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுசி திருஞானம்

‘ஊடக உலகின் ராணி’ என்று போற்றப்படுபவர் அவர். 25 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியவர் அவர். அமெரிக்க கறுப்பினத்தவர்களிலேயே சுயமாக முன்னேறிய நம்பர் ஒன் கோடீஸ்வரர் அவர். அமெரிக்காவை, வாசிக்கும் தேசமாக மாற்றியதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. சுருங்கச் சொன்னால் தன்னம்பிக்கையின் மறுபெயர் ஓப்ரா வின்ஃப்ரே. வறுமை, வன்கொடுமை, இழிச்சொல் அனைத்தையும் தன்னம்பிக்கையால் வென்றவர் ஓப்ரா வின்ஃப்ரே.

ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்காவின் மிஸிஸிபி மாநிலத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் 1954-ம் ஆண்டில் பிறந்தார். கணவனால் கைவிடப்பட்ட கறுப்பினத் தாயின் வளர்ப்பில் துயரங்களின் மொத்த வலியையும் சுமந்து வளர்ந்தார். அவரது அம்மா அடுத்த வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்துக் கொடுக்கும் இல்லப் பணியாளர். துணி வாங்கக்கூட காசில்லாமல் உருளைக்கிழங்குகளைக் கட்டிவைக்கும் சாக்குப் பையை உடுத்தி வளர்ந்தார் ஓப்ரா வின்ஃப்ரே. மற்ற சிறுவர்களால் எப்போதும் கேலி செய்யப்படும் வேதனையான சூழல் அது.

படிப்பில் படுசுட்டியாக இருந்தபோதும், பள்ளிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல முடியாத நிலைமை. 9 வயது முதலே வீட்டிலும் வெளியிலும் சிலரின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். துன்பத்தை வெளியில் சொன்னால் வசவு, அடி,  உதை. வேதனையைப் பொறுக்க முடியாமல் 13-ம் வயதில் வீட்டைவிட்டு ஓடினார். 14 வயதில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, பின் சில நாட்களில் இறந்துவிட்டது.

இவ்வளவு துயரம் மிக்க வாழ்க்கை தனக்கு அமைந்தது பற்றிப் பின்னாட்களில் அவர் இப்படிக் கூறினார்: “வாழ்க்கையின் மிகமிக மோசமான சம்பவங்களும்கூட, நீங்கள் அச்சத்துக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துகின்றன. அத்தனைக் கொடூரங்களை அந்தச் சின்ன வயதில் அனுபவித்ததால், அடுத்தவர்களின் வேதனையையும், வலியையும் என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. அதுவே, என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்தது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்