இடி... உரசல்... பெண்கள் துயரங்கள்!

மையல் அறைக்குள் முடங்கிக்கிடந்த காலம் மாறி, பெண்கள் வெளியுலகுக்கு வந்துவிட்டார்கள். வேலைக்காக, படிப்புக்காக என வெளியே வரும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள், கொடுமைகள் ஏராளம். குறிப்பாக, பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் பாலியல் இம்சைகள் கொஞ்சநஞ்சமல்ல. சில பெண்களின் துயரமான அனுபவங்கள்...

‘‘நெருப்பாற்றுப் பயணம்!’’

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதா, “மெரினா பீச் எதிர்ல இருக்குற காலேஜ்ல படிக்கிறேன். வேளச்சேரியில இருந்து பஸ்ஸுலதான் தினமும் போயிட்டு வர்றேன். அது ஒரு நெருப்பாற்றுப் பயணம். பீக் ஹவர்ல பயங்கரக் கூட்டமா இருக்கும். முட்டிமோதி பஸ்ஸுக்குள்ள போனா சில ஆம்பளைங்க பண்ற சில்மிஷங்கள் இருக்கே... அந்த அசிங்கத்தைச் சொல்றதுக்கே நா கூசுது. மேல உரசிக்கிட்டு நிக்கிறது... பின்னாடி நின்னு இடிக்கிறது... இடுப்புல கை வெக்கிறது... இவனுங்களுக்கு எல்லாம் அக்கா தங்கச்சியே கிடையாதான்னு நினைப்பேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்