போலீஸ் அராஜகத்தால் போன உயிர்!

“நடவடிக்கை எடுக்கணும்னா புது செல்போன் வாங்கிக் கொடு!”

போலீஸாரின் மெத்தனமும், போலீஸ் துறையில் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழலும், ஓர் அப்பாவி இளம் பெண்ணின் உயிரை காவு வாங்கியிருக்கிறது.

 சேலம் மாவட்டம் இளம்பிள்ளை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த தறித் தொழிலாளி அண்ணாதுரை. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு வினுப்ரியா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். வினுப்ரியா பி.எஸ்சி படித்தவர். இவரது புகைப்படம் ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டு முகநூலில் வெளியானது. உடனே, வினுப்ரியாவின் பெற்றோர் போலீஸை அணுகினர். ஆனால், அவர்களின் புகாரை வாங்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், அவர்களை அலையவிட்டு அலட்சியம் காட்டினர். அதனால் ஏற்பட்ட வேதனையில் வினுப்ரியா தற்கொலை செய்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்