மிஸ்டர் கழுகு: சுவாதி கொலை! - ஒற்றைக் காதலா... ரெட்டை மதமா?

போலீஸ் வேட்டையில் முளைக்கும் புதிர்கள்

ரபரப்புடன் வந்தார் கழுகார். ‘‘சுவாதி கொலை விவகாரத்தில் உள்ள இரண்டு புதிர்களைச் சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார்.

‘‘முதல் புதிர்... ஜூன் 15-ம் தேதிதான் சுவாதி அவரது ஃபேஸ்புக்கில் கடைசி ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். சுவாதியின் மரணத்துக்குப் பிறகு அவரது ஃபேஸ்புக் பக்கத்தை போலீஸார் முடக்கிவிட்டனர். இருந்தாலும், அவரது பழைய ஸ்டேட்டஸ்களைத் தீவிரமாகத் துருவி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் 700 பேர் ஃபாலோ செய்கிறார்கள். அவர்களில் ஒருவர், சுவாதி போட்ட பதிவை மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்திருக்கிறார். அதில், ‘தவறு செய்துவிட்டோம் என்பதற்காக அதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்காதீர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் சுவாதி. அவர்  எந்த மனநிலையில் இப்படியொரு ஸ்டேட்டஸை போட்டார் என்பதற்கான விடை தேடும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸ் டீம் தற்போது மும்முரமாக இறங்கியிருக்கிறது. அந்தப் பதிவு யாருக்காக... ஏன் போட்டார் என்பது பற்றி சுவாதிக்கு நெருக்கமானவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்’’ என்றவர், இரண்டாவது புதிரைச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்