முகங்கள் - கஜலட்சுமி ஐ.ஏ.எஸ்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை மீனவரின் இரு மகள்களின் கல்விச்செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி.

கடந்த டிசம்பர் மாதம் மழை, வெள்ளத்தில் அந்த மாவட்டம்  தத்தளித்தபோது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அனைவரையும்  திரும்பிப் பார்க்கவைத்தவர் கஜலட்சுமி. அது மட்டுமின்றி, குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள்  மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

‘‘அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை எவ்வாறு புரிந்து கொண்டீர்கள்?’’

‘‘எனக்குச் சிறு வயது முதலே ஏழை எளிய மக்கள் மீதான புரிதலும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை உணரும் பண்பும் இருந்தது. என் அப்பா சக மனிதரை மனிதராக மதிக்க வேண்டும் என்பார். மனிதநேயம் குறித்துப் பேசுவார். ‘நமக்குக் கீழே உள்ள மக்களின் வாழ்வு நிலையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்’ என்பார். என் பெற்றோர், எனக்கு முழுச் சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும்  இன்றைய கால ஓட்டத்துக்கு அவசியமாக உள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்