மிட்டாய் கடை

லந்து மிட்டாய்

கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவை ஓபன் செய்தாலே தல சுர்ருங்குது பாஸ். ஏன்னா,  சிலரோ ஊருக்குள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துவிட்டால்,  உடனே ‘இது ஏன் அப்படி இருக்கக் கூடாது? அது ஏன் இப்படி இருக்கக் கூடாது?’ என கதை, திரைக்கதை எல்லாம் எழுதி நடந்த சம்பவத்தில் குறியீடெல்லாம் கண்டுபிடித்து அருமையான கதை ஒன்றை ஸ்டேட்டஸாகப் போட்டுவிடுகிறார்கள். அந்த ஸ்டேட்டஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாராவது கமென்ட் போட்டால், அது சண்டையாக வளர்ந்து, அன்று ஒரு நாள் முழுக்க அதை வைத்தே செமத்தியாகப் பொழுதைப் போக்குகிறார்கள். கெரகத்த...

காவல் துறையே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாக குற்றவாளியைத் தேடிக்கொண்டிருக்கும். ஆனால், குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எனச் சிலர் விஷமத்தைக் கலந்துவிட்டு சமூக வலைதளங்களைச் சாதிச்சண்டை மைதானமாக்கி​விடுகிறார்கள். அதுவரை நியாயம் கேட்டுக்கொண்டிருந்த பலரும், கடுப்பாகி, சாதிச்சண்டையில் இறங்கி கீபோர்டை உடைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சில சமயங்களில் இதற்குள்ளும் தல - தளபதி சண்டை வேறு. என்னத்தச் சொல்ல...

கொலைச் சம்பவங்களில், கொலை செய்பவனைவிடச் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களைத்தான் இந்தச் சமுதாயம் கழுவி கழுவி ஊத்துகிறது. அப்படியே ‘அந்த ஊர்காரய்ங்க அப்படி... இந்த ஊர்க்காரய்ங்க இப்படி...’ என ஊர்ச் சண்டையாக வளர்த்துவிடுகிறார்கள். ‘நான் மட்டும் அங்கே இருந்திருந்தால்...’ என நாலைந்து மீம்களை உருவாக்கி அந்த ஊரையே உலுக்கி எடுக்கிறார்கள். கற்பனையாகவே கம்பும் சுத்துகிறார்கள். ஆக மொத்தத்தில் நடந்த குற்றத்துக்கோ, பிரச்னைக்கோ சரியான தீர்வை தேடாமல், பிரச்னையை எங்கெங்கேயோ சுத்தவிட்டு சுண்ணாம்பு அடித்து மறந்தேவிடுகிறார்கள். ஜவ்வு மிட்டாய் மாதிரி பிரச்னைகளை இழுக்குறோமே தவிர, அதற்கான  தீர்வை கண்டுபிடிச்சு முடிக்கமாட்றோம்... ம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்