சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

ஆர்.பாலகிருஷ்ணன்விமர்சனம்

ஆர்.பாலகிருஷ்ணனைப் பலரும் அறிந்து இருப்பார்கள். இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலாக முழுவதுமாக (1984-ல்) தமிழில் எழுதியவர். இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்த முதல் தமிழ் இலக்கிய மாணவர். குடிமைப்பணித் தேர்வை இன்று தமிழில் எழுதுவதும், தமிழ் இலக்கியம் படித்தவர்கள் எழுதுவதும் இயல்பானதாக ஆகிவிட்டது. இதற்கு அகரம் எழுதிய ஆர்.பாலகிருஷ்ணன், இப்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். நத்தம் இவரது சொந்த ஊர். சிந்துச் சமவெளி இவரது கனவு நகரம்.

“ ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற இந்த நூல், சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி இன்றுவரை வெளியாகி உள்ள தமிழ் நூல் களிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது” என்று சிந்துவெளி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனால் பாராட்டப்பட்ட இந்த நூலில் சிந்துவெளி நகரத்துக்கும், திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பை ஆர்.பாலகிருஷ்ணன் விளக்குகிறார். சிந்துவெளி மக்கள், திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்பது இவரது ஆய்வின் முடிவு.

சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றிய கண்டுபிடிப்புகள் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தன. அப்போதே சுனிதிகுமார் சட்டர்ஜி, இதற்கும் திராவிடர்களின் தோற்றத்துக்கும் உள்ள தொடர்பைத் தொடர்புபடுத்தி எழுதினார். இதைப் பலரும் வழிமொழிந்தார்கள். ஆனால், இதுதான் இறுதிமுடிவு என்று ஏற்கப் படவில்லை. அதுதான் இறுதிமுடிவு என நிறுவும் முயற்சியே இந்தப் புத்தகம்.

‘‘சிந்துவெளி எழுத்துக்களைப் படித்தறிய முடியாத நிலையில் சிந்துவெளிப் பண்பாடு நிலவிய நிலப்பகுதிகளில் ஒரு காலத்தில் திராவிட மக்கள் வசித்தார்கள் என்பதைச் சான்றாதாரங்களுடன் நிறுவ முடியுமா என்பதைப் பொறுத்தே சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடப் பண்பாடு என்ற வாதத்தின் நம்பகத்தன்மை தீர்மானிக்கப்படும்” என்று நினைத்த ஆர்.பாலகிருஷ்ணன், திராவிட மக்கள் வட மேற்குப் பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதை ஊர்ப்பெயர்கள் மூலமாக நிறுவுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்