ஆறு பேர் தகுதிநீக்கம் அநியாயம்!

குடிமைப் பணி தேர்வில் குளறுபடி...சர்ச்சை

மிழத்தில் இருந்து இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓ.பி.சி) சேர்ந்த ஆறு பேரை, மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மற்றும் பயிற்சிப் பிரிவுத் துறை தகுதிநீக்கம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சங்கரிடம் பேசினோம். “தமிழகத்தில் இருந்து யு.பி.எஸ்.சி தேர்வில் இந்த முறை 80-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் ஆறு பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆறு லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பைத் தாண்டி இருப்பதால், பொதுப் பிரிவினராக அவர்கள் கருதப்படுவார்கள் என்று தகுதிநீக்கத் துக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஓ.பி.சி பிரிவில் க்ரீமி லேயரில்  கூறப்பட்டிருக்கும் வருமான உச்சவரம்புக்கு அப்பாற்பட்டு வருவதால் இவர்கள் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டு உள்ளனர். யு.பி.எஸ்.சி தேர்வில் இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்ட 23 வருடங் களில் இதுபோல மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. அந்த ஆணையில் சொல்லியுள்ளதுபடி, சம்பந்தப்பட்ட மாணவருக்கோ, அவரது பெற்றோருக்கோ ஆறு லட்சம் ரூபாய் வருமானம் அரசுப் பணியில் இருந்து சம்பளமாகவோ அல்லது விவசாயத்தில்   இருந்து வருமானமாகவோ வந்தால் அவை கணக்கில் கொள்ளப்படாது. அதுவே தனியார் துறையிலோ, பொதுத்துறை நிறுவனங்களில் (என்.எல்.சி., எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., வங்கி) வேலை செய்வதன் மூலமோ ஆறு லட்சம் ரூபாய் வருமானம் வந்தால் அவர்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. குரூப் 2 தேர்வின் மூலம் பணியில் சேர்ந்து 40 வயதுக்கு முன்னதாகவே குரூப் 1 அதிகாரியாகிவிட்டால் அவர்களும் க்ரீமி லேயருக்குள் வந்துவிடுவார்கள். இதுவே, 40 வயதைக் கடந்து குரூப் 1 அதிகாரி ஆகிவிட்டால், அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தொடர்வார். இவை எல்லாம் குழப்பத்தை உண்டு செய்கின்றன. இப்படி இன்னமும் பல விஷயங்கள் தெளிவாக வரைமுறைப் படுத்தப்படவில்லை. அதைவிட இத்தனை ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் மாறியுள்ளது. ஏழாவது சம்பளக் கமிஷன் வந்தபிறகு சம்பளம் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், எப்போதோ அறிவிக்கப்பட்ட ஆறு லட்சம் ரூபாய் என்கிற நிர்ணயத்தை வைத்து அளவிடுவது தவறு. இதனால், பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களை இதுபோல காரணம் காட்டி பொதுப் பிரிவுக்கு மாற்றினால் இடஒதுக்கீடு முறையே கேலிக்கூத்தாகிவிடும். 

இந்த இடஒதுக்கீட்டு முறையை அடுத்தடுத்து அரசுப் பணிகளுக்கும், அரசு கல்லூரிகளுக்கும் கொண்டு வந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கு நியாயமான இடஒதுக் கீட்டைப் பெறமுடியாமல் போய்விடும். இதன்மூலம்  உயர் வகுப்பைச் சார்ந்தவர்களும், பொருளாதார பலம் உள்ளவர்களும் மட்டுமே மீண்டும் அதிகாரத்தின் பதவிகளில் இருக்கமுடியும். இதற்கு உடனடியாக மத்திய அரசு தலையிட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்த க்ரீமி லேயர் வரையறையால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பேசினோம். “எனது தந்தை ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த எனக்கு, ‘உங்கள் தந்தையின் வருமானம் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதால் பொதுப்பிரிவுக்கு மாற்றுகிறோம்’ என்று சொல்லி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்