மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

சூழல்பவா செல்லதுரை

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையைப் புதுப்பிப்பதாகக் கூறி வனத்தை ஒட்டிய மரங்களை ஈவு இரக்கமின்றி வெட்டுகிறார்கள் என்ற செய்தி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

“மலை சுற்றும் பாதையைச் சுற்றிலுமுள்ள பல நூறு மரங்கள் ஜே.சி.பி-யால் வேரோடு பிடுங்கிச் சாய்க்கப்படுகின்றன. தங்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்ய விரும்புபவர்கள் மலை சுற்றும் பாதையில் சந்திக்கலாம்” என்ற குறுஞ்செய்தி என்னை அடைந்தபோது இரவு 11 மணி. ஓர் அரசால் எப்படி எந்த முன்யோசனையும் இன்றி ஒரே உத்தரவில் இயற்கை இந்தப் பூமிக்குக் கொடுத்த இத்தனைப் பெரிய வரத்தை அழித்துவிட முடிகிறது? ஐந்தரை மணிக்கு எழுந்து என் பைக்கில் சமுத்திர ஏரிக்கரை வழியே மலை சுற்றும் பாதையை அடைந்தபோது 100-க்கும் மேற்பட்ட மனிதர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் தூக்கமின்மையும், துக்கமும், சோகமும் பதிந்திருந்தன.

இரவில் முறித்துப் போடப்பட்ட, பசும் மரங்களின் வேர்கள் செத்த மாடுகளைப்போலக் கிடந்தன. ஏழு மணிக்குள் அங்கு கூடியவர்களின் எண்ணிக்கை 150-ஐத் தாண்டியது. 10 மணிக்கு கலெக்டர் இது விஷயமாக எங்களைப் பேச அழைத்திருக்கிறார் என்பதே சிறு ஆறுதல் செய்தியாக இருந்தது. தன் வேட்டையைத் தொடங்க மஞ்சள் நிற அரக்கனைப்போல ஒரு ஜே.சி.பி எந்திரம் உறுமியது. கலெக்டர் எங்களுடன் பேசும்வரை எந்தத் தாவரத்தையும் தொட வேண்டாம் என அதன் ஓட்டுநரிடமும், மேற்பார்வை யாளரிடமும் தோழமைக் குரல்கள் கோரிக்கை வைத்தன.

திரும்பிப்போன அந்த எந்திரம், தன் எஜமானர்களின் உத்தரவின் பேரில் மூன்று பெருமரங்களை வேரோடு பிடுங்கிப் போட்டது. எங்கள் கண்முன்னே நடந்த இந்தப் படுகொலையை நாங்கள் தடுக்க முற்படும் முன், அவை சவங்களாய் முட்காட்டில் கிடந்தன. நாங்கள் யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல் சாலையில் உட்கார்ந்தோம். அடுத்த 10-வது நிமிடம் போலீஸ் வந்தது. எங்கள் விவாதங்கள் கூடிக்கொண்டே போயின. வார்த்தைகளின் உஷ்ணம் போலீஸையும் நிதானிக்க வைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்