மிஸ்டர் மியாவ்

சினிமா

ராதாமோகன் இயக்கிய ‘மொழி’, ‘அபியும் நானும்’ படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. அவர் இயக்கத்தில் இன்னும் பெயர்வைக்காமல் இருக்கும் படத்தில் கருணாநிதி பேரன் உதயநிதியையும், ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் பேத்தி தான்யாவையும் நடிக்கவைக்கிறார். தான்யாவின் முக அமைப்பைப் பார்த்த மிஸ்கின், தனது அடுத்தபட நாயகி ஆக்கிவிட்டார். ரவிச்சந்திரன் குறித்து தான்யாவிடம் கேட்டால், ‘எங்க தாத்தா சி.எம்-கூடவே நடிச்சவரு. நான் முன்னாள் சி.எம் பேரன்கூட நடிக்கிறேன்” என்று குஷியில் குதிக்கிறார்.

ஒரு காலத்தில் ‘சமைஞ்சது எப்படி...’ என்கிற சமூக பிரக்ஞை உள்ள பாடலை ‘இந்து’ படத்தில் படமாக்கியவர் இயக்குநர் பவித்ரன். இப்போது எடுத்துவரும் ‘தாராவி’ படத்தில் நடிகை ராக்கியின் உடையில் தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்தி இருக்கிறார். மும்பையில் 100 நாட்கள் தாராவி பகுதியில் தங்கியிருந்தபோது ஏகப்பட்ட உருட்டல் மிரட்டல் விடுத்த நபர்களிடம் இருந்து ராக்கியைப் பாதுகாப்பதற்குள் திரைப்பட யூனிட்டுக்கே வாயில் நுரை தள்ளிவிட்டதாம்.

ன்னடத்தில் ஹிட் அடித்த ‘மாணிக்கா’ படத்தின் ஹீரோயின் ரன்யா ராவ், தமிழில் ‘வாகா’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடி. ரன்யா ராவின் அப்பா, ராமச்சந்திர ராவ் கர்நாடகாவில் போலீஸ் கமிஷனர். பொறியியல் படித்துக்கொண்டே நடித்துக்கொண்டு இருக்கும் ரன்யா ராவ், ‘வாகா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் யூனிட்டுக்கே ஏக குஷி. எல்லோருக்கும் சாக்லேட் மழையாகப் பொழிந்து மகிழ்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்