சமூக வலையில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்வது எப்படி?

Special ஸ்டோரி!அலசல்

ருவரை நாம் பார்த்துப் பழகிய சில நிமிடங்களிலேயே கேட்பது, ‘‘ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா?”... ‘‘வாட்ஸ் அப் நம்பர் தர முடியுமா?” என்பதுதான். செல்போனில் வாட்ஸ் அப் இல்லை என்றாலோ, ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லை என்றாலோ, அவர்களை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் நாம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய தகுதி, ஸ்டேட்டஸ் இருக்கும் என மற்றவர்கள் நினைக்கும்படி இவை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம் ஆகிவிட்டன. சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன, குறிப்பாகப் பெண்களுக்கு.

சேலம் சந்தித்த கொடுமை!

சேலத்தில் வினுப்ரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது முகத்தை நிர்வாணப் படத்துடன் சேர்த்து மார்ஃபிங் (Morphing) செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டார்கள். அதுபற்றி போலீஸில் புகார் செய்தும், உரிய நேரத்தில் நடவடிக்கை இல்லை. அவமானம் தாங்காமல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். வினுப்ரியாவுக்கு மட்டுமல்ல, நாட்டில் பலருக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

ஃபேஸ்புக் சிநேகிதம்!

வேலூரில் படித்த ஒரு பெண், சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஃபேஸ்புக் அவருக்குப் புதிது. அதில், அவருக்கு ஓர் இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் சாட்டிங் செய்ய ஆரம்பித்தனர். பிறகு, நேரில் சந்தித்தப் பின்பு நெருக்கம் அதிகமானது. திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்தபோது அந்த இளைஞன் சரியான பதில் அளிக்கவில்லை. சந்தேகம் அடைந்து அந்த இளைஞரைப் பற்றி விசாரித்தபோது, ஃபேஸ்புக் மூலமாகப் பல பெண்களிடம் அவர் பழகுவது தெரியவந்தது.

காவு வாங்கிய வீடியோ கால்!

தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்துவந்த ஒரு பெண், தன் கணவரைப் பிரிந்து இருந்தார். ஃபேஸ்புக்கில் அவர் சோகமாகவும், தன் தனிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் பதிவுகள், படங்கள் ஷேர் செய்வதுமாக இருந்திருக்கிறார். அந்தப் பதிவுகளைப் பார்த்த ஒருவர், அந்தப் பெண்ணுடன் பேசத்  தொடங்கினர். வீடியோ சாட்டிங்கில் ஒருவரை ஒருவர் வர்ணித்துக்கொள்வதும், ஆபாசப் பேச்சுகளும் அதிகமாகின. சில மாதங்களில் அந்தப் பெண்ணின் கணவர் அவருடன் சேர்ந்து வாழ நினைப்பதாகக் கூறியுள்ளார். இவரும் அதை ஏற்று ஒன்றாக வாழத் தொடங்கினார். அதன் பிறகு, ஃபேஸ்புக் நண்பரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், இருவரும் நட்பாகப் பேசிய காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை உன் கணவருக்கு அனுப்பிவிடுவேன் என அந்த ஆசாமி மிரட்டி இருக்கிறார். இந்த விஷயத்தை அவளால் கணவரிடம் சொல்ல முடியாமல் தவித்தார். கடைசியில் அந்தப் பெண், மனநிலை பாதிக்கப்பட்டார்.

பணம் பறிக்க ஃபேஸ்புக்!

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ். அவருக்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணிடம் இருந்துவந்த ரெக்வஸ்ட்டை ஏற்றுக்கொண்டார். பிறகு அந்தப் பெண்ணே இவரிடம் பேசத் தொடங்கியுள்ளார். சில நாட்களில், தனக்கு யாரும் இல்லை எனவும், உங்களைத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று ஹரீஷிடம் கூறியுள்ளார். அந்தப் பெண் மீதான பரிதாபத்தில் ஹரிஷும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். உடனே அந்தப் பெண், தனக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் உள்ளது என்றும், அந்தக் கடனை அடைத்துவிட்டால் திருமணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளார். ஹரிஷும் பணம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால் சந்தேகம் வந்து அவரின் மொபைல் நம்பரை டிராக் செய்தபோது, அந்தப் பெண் கொடுத்திருந்தது போலி முகவரி என்பதும், இதுபோல அந்தப் பெண், பல ஆண்களை ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

நல்லதில் நடக்கும் தீமைகள்!

சமூக வலைதளம் என்பது மிகப் பெரிய பொக்கிஷம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். தனித்தனித் தீவுகளாகப் பிரிந்துகிடக்கும் மனிதச் சமூகம் குழுக்களாக இணைய, அடித்தளம் அமைப்பவை சமூக வலைதளங்கள். எத்தனையோ பிரச்னைகள் சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதே சமூக வலைதளங்களால் தான் பலரும் தங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை இழக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்