சர்ச்சைகளின் ராணி சரிந்தது எப்படி?

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர் போராட்டம், மாணவர் ரோஹித் வெமுலா மரணம், டெல்லியில் ஜே.என்.யு மாணவர் போராட்டம் எனப் பல்வேறு பிரச்னைகளின்போது சர்ச்சைகளில் சிக்கிவந்த ஸ்மிருதி இரானியிடம் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத ஜவுளித் துறை வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது பொதுவாகச் சொல்லப்படும் காரணம். ஸ்மிருதி இரானியிடம் இருந்து பறிக்கப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) இருந்த பிரகாஷ் ஜவடேகருக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகத் தொழிலகங்களுக்குச் சாதகமான பல நிலைகளை மேற்கொண்டு நல்லபிள்ளை என்ற பெயரெடுத்த ஜவடேகருக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த கல்வித் துறை தரப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்