மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

வாசுவைப் பற்றி அவன் அம்மா எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது. மற்ற குழந்தைகளாவது மணலில் விளையாடுவது, கைகளை அழுக்காக்கிக் கொள்வது, ஹோம் ஒர்க் எழுதாமல் வம்பு செய்வது என்று இருப்பார்கள். ஆனால், வாசு ஒரு நாள்கூட அம்மாவுக்கு எந்தக் கஷ்டமும் கொடுத்ததே இல்லை.

தன் வேலைகளைத் தானே செய்துகொள்வான். அதேபோல், எல்லா விஷயத்திலும் ரொம்பவே சுத்தமாக இருப்பான். கழிப்பறைக்குப் போய் வந்தால் கையைச் சோப் போட்டு கழுவுவது, சுத்தமான மேசை நாற்காலிகளில் மட்டும் அமர்வது, யூனிஃபார்ம் சட்டையின் மடிப்புக்கூட கலையாமல் வீட்டுக்கு வருவது என்று எல்லாவற்றிலுமே சுத்தத்தைக் கடைப்பிடிப்பான். அதுவும் ஏழு வயசிலேயே.

வாசு, சமீபகாலமாய் ரொம்பவே அதிகமாகச் சாமி கும்பிட ஆரம்பித்திருந்தான்.

பள்ளிக்கூடத்திலும் அதிகபட்ச பக்தியைக் கடைப்பிடித்தான். எந்த அளவுக்கு என்றால், ஒவ்வொரு முறை எழுத ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று ஆரம்பித்தவன், ஒரு சுழிக்குப் பதிலாக 11 சுழிகள் போட ஆரம்பித்தான். அவன் பிள்ளையார் சுழிகள் போடுவதற்குள்... மிஸ், போர்டில் எழுதியதை அழித்துவிட்டு, அடுத்த பத்தியை எழுதிவிடுவார். இதனால், கிளாஸ் ஒர்க் நோட்டை அவனால் சரியாக நிரப்ப முடியவில்லை.

இதற்கிடையில், பள்ளிக்கூடத்தில் சுகாதாரம் பற்றி வகுப்பு நடத்தினாலும் நடத்தினார்கள், இவன், கிருமிகள் பரவி இருப்பதாக நினைத்து நினைத்துப் பயப்பட ஆரம்பித்தான். மற்ற மாணவர்கள் தன்னைத் தொட்டால் அவனுக்குப் பிடிக்காமல் போனது, யார் அருகிலும் உட்கார்ந்து சாப்பிடவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மற்றவர் மூச்சுக்காற்று தன் மீது பட்டால் தனக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து, உடனே ஓடிப்போய் தன் கைகளைக் கழுவ ஆரம்பித்தான். அதுவும் ஒரு தடவை, இரண்டு தடவை இல்லை. சரியாக 11 முறை கழுவினால்தான் சுத்தமாகிவிட்டதாய் அவனுக்குத் தோன்றியது. 

“பாத்ரூம் போய் இவ்வளவு நேரமாச்சு, இன்னும் அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே” என்று அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ திட்டியும் விட்டார்கள், அதுபற்றிக் கவலையேபடாமல் தனக்குத் திருப்தி வரும்வரை குளித்துக்கொண்டே இருந்தான் வாசு.  

ஏன் இப்படி இருக்கிறான், எப்படி அவனிடம் இதுபற்றிக் கேட்பது என்று யோசிக்கும்போதே, வாசு அம்மாவை உலுக்கிக்கேட்டான். “அம்மா, நான் நல்ல பையன்தானே? என்னை நல்ல பையன்னு சொல்லுங்களேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்