முகங்கள் - உமேஷ் சச்தேவ்

சாதனை

போனில் ஒருவர் எந்த மொழியில் பேசினாலும், எதிரே இருப்பவர்கள் அதை அவர்கள் மொழியிலேயே புரிந்துகொள்ளும் சாஃப்ட்வேரை கண்டுபிடித்ததால், ‘உலகை மாற்றிய 10 பேரில் ஒருவர்’ என்ற விருதை ‘டைம்ஸ்’ இதழ் உமேஷ் சச்தேவுக்கு தந்துள்ளது. அவரிடம் பேசினோம்.

‘‘எப்படி இருக்கிறது இந்தத் தருணம்?’’

‘‘இந்த விருது, என்னுடைய இலக்கை நோக்கி இன்னும் வேகமாக ஓடவைத்திருக்கிறது. என்னுடைய கண்டுபிடிப்பு, மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்தேன். அது நிறைவேறி இருக்கிறது.’’

‘‘ஐ.ஐ.டி மாணவரான நீங்கள் சென்னையைத் தேர்ந்தெடுத்து நிறுவனம் தொடங்கியது ஆச்சர்யமாக இருக்கிறதே?’’

‘‘எங்கள் நிறுவனத்தையும், இந்தக் கண்டுபிடிப்பின் பலன்களையும் இந்தியாவில் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும் என நம்பினோம். வெளிநாடுகளைவிட இங்கு இதன் அவசியம் அதிகம் என நினைத்தோம். இப்போது அது சாத்தியமாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 16 இந்திய மொழிகளிலும், 70 உலக மொழிகளிலும், 150 பேச்சு வழக்குகளிலும் செயலாற்றி வருகிறோம்.’’

‘‘உங்களது மற்றொரு கண்டுபிடிப்பான ‘அகெய்ரா’ பற்றி..?’’

‘‘பேசுவதைப் புரிந்துகொண்டு செயலாற்றும் ஒரு சாஃப்ட்வேர்தான் ‘அகெய்ரா’. ஆப்பிளில் குரலைக் கேட்டுக் கணக்குப்போடும் ‘சிறி’ மென்பொருள் போன்றுதான் இதுவும். பார்வையற்றவர்களுக்கு நிறையவே உதவியாக இருக்கும். சொந்த மொழியில் ஒரு விஷயத்தைச் சொல்லி அதை நிறைவேற்றிக்கொள்ள அகெய்ரா உதவும். வங்கிக் கணக்குகளில் பணம் போடச் சொல்லித் தொகையைச் சொன்னால் அதையும் அப்படியே செய்யும். இதுபோன்ற பல விஷயங்களுக்கு அகெய்ரா உதவும்.’’

‘‘இந்தத் தூரத்தைக் கடந்துவர நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்குமே?’’

‘‘ஐ.ஐ.டி-யில் படிப்பை முடித்தபோது நானும், நண்பர் ரவி சரோகியும் ‘சிங்குலரிஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். தொலைந்துபோன போன்களைக் கண்டுபிடித்து தருவதுதான் இதன் நோக்கம். வருமானம் வரும் என நினைத்து ஆரம்பிக்கவில்லை. இருந்தாலும் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே நிறுவனத்தை மூடிவிட்டோம். அப்போதுதான் இந்தப் புதிய ஐடியா வந்தது. ஆனால், டெக்னிக்கல் சப்போர்ட் சரியில்லை. எங்கள் தவறுகளைக் கண்டுபிடித்து சில இடங்களில் சரி செய்தோம். ஆனால், பல நேரங்களில் எங்களின் தன்னம்பிக்கையும், பொறுமையும் உடைந்துவிடும் நிலையில் இருந்தன.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்