முகாம் நடத்திய காட்டில் நடக்கும் கொலைகள்!

கார்ப்பரேட் பிடியில் யானைப் பாதைகள்...பரிதாபம்

யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் நடத்த லட்சக்கணக்கான ரூபாய்  செலவுசெய்யும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் அடுத்தடுத்து ஏழு யானைகள் உயிரிழந்துள்ளன. கோவை மண்டலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஏழு யானைகள் இறந்திருக்கின்றன. இவற்றில் இரண்டு பெண் யானைகள் ரயிலிலும், பஸ்ஸிலும் அடிபட்டு இறந்திருக்கின்றன. 

கடந்த 20-ம் தேதி மதுக்கரையில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் யானை ஒன்று உயிரிழந்ததது. யானைகள் ரயில் பாதையைக் கடக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்ட அந்தப் பகுதியில் ரயிலை மெதுவாக இயக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் கண்டுகொள்ளப்படாதது இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

21-ம் தேதி வனத்துறையால் பிடிக்கப்பட்ட காட்டு யானை மதுக்கரை மகராஜ் இறந்தது. யானை ஊருக்குள் புகுவதாக எழுந்த புகாரை அடுத்து, காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத்துறை, அந்த யானையை காரல் எனும் வதைக் கூண்டில் அடைத்துச் சித்ரவதைசெய்ய அது பரிதாபமாக இறந்தது. கூண்டில் தலையை முட்டி தற்கொலை செய்துகொண்டதாக விளக்கம் சொன்னது வனத்துறை.

இதன் தொடர்ச்சியாக கடந்த 25-ம் தேதி கேரளாவில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் காயங்களுடன் புகுந்த ஆண் யானை ஒன்று கோவை அருகே உள்ள காரமடை வனத்தில் இறந்தது. புல்லட் காயம் பட்டு யானை இறந்திருக்கக்கூடும் என கேரளா வனத்துறை மருத்துவர்கள் சொன்னார்கள். காட்டெருமை களோடு சண்டை போட்டதில் யானை இறந்ததாக விளக்கம் சொன்னது தமிழக வனத்துறை. அடுத்து குன்னூரில் கடந்த மாதம் 30-ம் தேதி நீலகிரி மலைப்பகுதியில் கூட்டத்தோடு சென்று கொண்டிருந்த குட்டி யானை ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தது.

கடந்த 4-ம் தேதி கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் யானை ஒன்று, பஸ் மோதி படுகாயமடைந்தது. சிகிச்சைக்காக முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட யானை பரிதாபமாக இறந்தது. கடந்த 3-ம் தேதி கோவை மாவட்டம், சிறுமுகை வனத்தில் ஆண் யானை ஒன்றும், 5-ம் தேதி நரசீபுரம் பகுதியில் பெண் யானை ஒன்றும் பரிதாபமாக இறந்தன. 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க இந்த யானைகள், உடல்நலக்குறைவால் இறந்ததாகச் சொல்கிறது வனத்துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்