‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’

திகில் கிளப்பும் சந்திரகுமார்

மிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகளைச் சந்தித்து தி.மு.க-வோடு இணைய ஆதரவு திரட்டி வருகிறார் மக்கள் தே.மு.தி.க ஒருங்கிணைப்பாளராக இருந்து தி.மு.க-வில் இணைந்த சந்திரகுமார். இதுகுறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘மக்கள் தே.மு.தி.க-வில் இருந்து தி.மு.க-வில் இணைந்தீர்கள். தற்போது என்ன நடக்கிறது? உங்கள் மூலமாக தே.மு.தி.க-வை உடைக்கப் பார்க்கிறதா தி.மு.க?’’


‘‘தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் சந்திப்பு நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பே தே.மு.தி.க-வில் இருந்து விலகி, எங்களோடு தி.மு.க-வுக்காக உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறோம். அவர்கள் அனைவரும் தி.மு.க-வில் இணைய முடிவு எடுத்து இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. விஜயகாந்தின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தனித்து இருப்பவர்களை மட்டுமே சந்திக்கிறோம். வரும் 17-ம் தேதி பிரமாண்ட இணைப்பு விழா தளபதி ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கிறது. சுமார் மூன்று லட்சம் பேர்வரை தி.மு.க-வில் இணைய இருக்கிறார்கள். நாங்கள் எந்த விதத்திலும் இதற்குக் காரணம் இல்லை. தே.மு.தி.க நிர்வாகிகள் தி.மு.க-வில் மட்டும் இணையவில்லை. பி.ஜே.பி., அ.தி.மு.க-விலும் இணைகிறார்களே? இது, முழுக்க முழுக்க விஜயகாந்த்தின் தவறான முடிவால் ஏற்பட்ட சூழ்நிலை. இது முதல்கட்டம்தான். இன்னும் சில நாட்களில் தே.மு.தி.க இருக்காது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்