"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"

நந்தினியால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

ந்தினி உயிரைக் கொடுத்து மது ஒழிப்புப் போராட்டத்துக்கு உயிர் ஊட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

சென்னையின் தினப்படி வழக்கமாக மாறிவிட்ட செயின் பறிப்பு சம்பவத்தில் உயிரை இழந்தவர் நந்தினி. பட்டினம்பாக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடைதான் இதுபோன்ற சம்பவத்துக்குக் காரணம் என்று அந்தப் பகுதி மக்கள் போராட்டம் தொடங்கி அதை வீரியத்துடன் நடத்தவும் இவரது மரணம் மறைமுகக் காரணம் ஆகிவிட்டது.

நந்தினியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. தந்தை வடிவேல் பெயின்டராக  வேலைபார்த்து வருகிறார். அவருடைய வருமானம் போதாமல், வீட்டு வேலை செய்து நந்தினியைப் படிக்க வைத்து உள்ளார், தாய் செல்வி. அம்மாவின் கஷ்டத்தை இளம் வயதிலேயே புரிந்துகொண்ட நந்தினி பொறுப்புள்ள மகளாக வளர்ந்துள்ளார். பெற்றோரும், தம்பி விக்னேஷும் தான்  தன் உலகம் என வளர்ந்த அவர், 12-ம் வகுப்பில் 900 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பின்னர், பி.சி.ஏ படிப்பை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் படித்துள்ளார். தொலைதூரக் கல்வியில் எம்.சி.ஏ படித்துக்கொண்டு தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வறுமையைக் கடக்க இந்த வேலை உதவியது. சம்பளப் பணத்தை எடுக்கச் சென்றபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. நந்தினியிடம் இருந்து பணத்தைப் பறித்த திருடனைப் பிடிக்க இவர்கள் போய், அவர் இவர்களது வாகனத்தைத் தட்டிவிட்டதால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நந்தினி இறந்துபோனார்.

அவருடன் கொள்ளையனைத் துரத்திச் சென்றதால் காயம்பட்ட நந்தினியின் அத்தை மகள் நஜ்ஜு நடக்க முடியாமல், உட்கார முடியாமல் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்