மிஸ்டர் மியாவ்

‘‘இனிமேல் காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன்’’ என்று சந்தானம் முடிவெடுத்துவிட்டார். அவர் நினைத்த மாதிரியே ‘தில்லுக்கு துட்டு’ பேய் படம் வசூலை அள்ளியது. அடுத்து, ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அஜித், தனது படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார். அதைத் தவிர்த்துள்ளார் சந்தானம். தனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் கிடுகிடுவென ஹீரோவாக வளர்ந்துவிட்டதால் எடுத்த முடிவுதானாம் அது.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துக்குப் பிறகு, யாரும் சூரியை அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லை. ‘புஷ்பா புருஷன்’ என்றே அழைக்கிறார்கள். அடுத்து, உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார். சினிமாவில், ஒருநாள் கால்ஷீட் என்பது காலை 10 மணி முதல் மாலை ஆறு மணிவரை இருக்கும். முன்பு கவுண்டமணி, வடிவேலு போன்றவர்கள் ஒருநாள் கால்ஷீட்டுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி நடித்து இருக்கிறார்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் சூரி ஜொலிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்