தமிழ்நாடு... ‘கொலை’நாடு! - ஒரே நாளில் 10 கொலைகள்!

முன்பகை... காதல்... சொத்து... குடும்பத் தகராறு... பாலியல்... பழிக்குப்பழி!வெறித்தனம்

மிழ்நாடு கொலை நாடாக மாறி அச்சமூட்டுகிறது. திருட்டு, வழிப்பறி, பழிக்குப்பழிக் கொலைகள், ஆணவக்கொலைகள், கூலிப்படைக் கொடூரங்கள் சர்வசாதாரணமாக நிகழ்த்தப் படுகின்றன.  உயர் நீதிமன்றத்துக்குள் வைத்து, வழக்கறிஞர் வெட்டப்படுகிறார்; பந்தோபஸ்த்தில் இருக்கும் போலீஸுக்கு மண்டை உடைகிறது; பட்டப்பகலில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நெரிசல் மிகுந்த வீதிகளில் வைத்து, மனித உடல்கள்  பயங்கர ஆயுதங்களால் குத்திக் குதறப்படுகின்றன.

குடும்பத் தகராறில் ஈடுபட்ட தம்பதியை, பிரசவத்துக்கு வந்த பெண்ணை லத்தியால் விளாசி, பூட்ஸ் காலால் மிதித்துத் துவைக்கும் போலீஸ் காரர்களால், கொலைகாரக் குற்றவாளிகளைக் கட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை. இன்றையச் சூழலில், ஒவ்வொரு கொலை - கொள்ளை நடக்கும்போது, ஊடகங்களும் சமூக வலைதளங்களும் காவல் துறையின் மானத்தை, நொடிக்குநொடி கொடியிறக்கம் செய்கின்றன. ஆனால், எதையும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை அரசாங்கம். எதற்கும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை காவல் துறை.

கடந்த 4 மாதங்களாகத் தமிழகத்தில் தொடர்ந்து ரத்தத்துளிகள் சிதறிக்கொண்டிருக்கின்றன. உச்சகட்டமாக ஜூலை 12-ம் தேதி, ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் முகத்தில் ரத்தக்கறை பூசப்பட்டது. ஒரே நாளில் நடந்த 10 படுகொலைகள் நாட்டைப் பதறவைத்திருக்கிறது.

அந்தச் சம்பவங்களின் விவரம்...

ஓடும் பேருந்தில் இரட்டைக் கொலை!


நெல்லை மாவட்டத்தில் ஓடும் பேருந்தில், பழிக்குப்பழியாக நடத்தப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவம் தமிழகத்தை அதிரவைத்த ஒன்று. நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள சீதபற்பநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய தம்பி மாரியப்பன். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்ணப்பனுக்கும் வயலுக்கு நீர்பாய்ச்சுவதில் முன்விரோதம் இருந்தது. இதில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி, கண்ணப்பன் கொலை செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனும் மாரியப்பனும் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இருவரும் ஜாமீனில்  வெளிவந்தனர். 12-ம் தேதி சேரன்மாதேவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகிவிட்டு, அரசுப் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, பேருந்தில் ஏறிய மர்மக்கும்பல் ஒன்று, இருவரையும் சரமாரியாக வெட்டியது. மாரியப்பன் பேருந்துக்குள்ளேயே இறந்துவிட்டார். தப்பியோடிய பாலசுப்பிரமணியனை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், அவரையும் கொலை செய்துவிட்டு, அரிவாளைச் சுழற்றிக்கொண்டு டூவிலரில் தப்பித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்