காணாமல்போன கோயில்கள்... களவுபோகும் கடவுள் சிலைகள்!

சர்வதேச திருடர்கள் உஷார்கடத்தல்

சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பது பணம் கொழிக்கும் பிசினஸ். பல பெரிய முதலைகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது சமீபகாலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் கேலரியுடன் இணைந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் அபர்ணா கேலரியில் உள்ள ஓவியங்கள் மற்றும் கிடங்கில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் என தீனதயாளனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளை இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்திருக்கிறது. ஒவ்வொரு சிலையாக ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் காலங்களைக் குறித்துள்ளார்கள். கைப்பற்றப்பட்ட சிலைகளில் 90 சதவிகிதத்துக்கு மேல் பழமையானது என்று இந்தியத் தொல்லியல் துறை சான்று அளித்துள்ளது. இந்தச் சிலைகளில் 17  சிலைகள் திருட்டுச் சிலைகள் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தீனதயாளனின் கூட்டாளி லட்சுமிநரசிம்மனின் மகாபலிபுரம் சிற்பக்கூடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளைஅடுத்ததாக ஆய்வு செய்ய உள்ளார்கள்.

பிடிகொடுக்காத இந்து அறநிலையத் துறை!

இந்த வேலைகள் முழுவதுமாக முடிந்தபிறகு, இந்து அறநிலையத் துறையின் மூலமாக ஒவ்வொரு சிலையைப் பற்றிய முழுவிவரங்களும் கோயில் குருக்களின் மூலமாகப் பெறப்படும். கைப்பற்றப்பட்ட சிலைகளை இந்து அறநிலையத் துறை கமிஷனர் இதுவரை வந்து பார்வையிடவில்லை. மீடியாக்களுக்குப் பயந்தே பார்வையிடாமல் பயந்து ஒதுங்கிக்கொள்கிறார் என்று காவல் துறை வட்டாரத்திலேயே கிசுகிசுக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட சிலைகளை ஆய்வு செய்ததில் இரண்டு கோயில்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன எனத் தெரியவந்துள்ளது. அதில் ஒரு கோயில் அடையாளம் காணப்பட்டு, குற்றவாளிகளைக் காவல் துறை நெருங்கிவிட்டது எனவும், அதில் அரசக் குடும்பம் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இன்னொரு கோயில் எதுவென்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிலைக் கடத்தலில் இன்டர்நேஷனல் இன்ஃபார்மர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்