பனை மட்டை வகுப்பறைகள்... ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகள்!

பரிதாப நிலையில் பள்ளிக்கூடங்கள்...

றிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் பள்ளிக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் கவலைக்குரிய தாகவும், மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சத்தைத் தருவதாகவும் இருக்கின்றன.

2004, ஜூலை 16-ம் தேதி, தமிழக மக்களால் மறக்க முடியாத நாள். கும்பகோணத்தில் அரசு உதவிபெறும் ஸ்ரீகிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் விதிமுறைகளை மீறி ஒரே கட்டடத்தில் மூன்று பள்ளிகள் செயல்பட்டதால், அங்கு தீவிபத்து ஏற்பட்டபோது 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த கொடுமை நிகழ்ந்த தினம் அது. அந்தத் துயரச்சம்பவம் நிகழ்ந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், அதில் இருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கு உதாரணமாகத் தமிழகத்தில் பல பள்ளிக்கூடங்களின் நிலைமை இருக்கிறது. அதுபற்றிய ஒரு ரிப்போர்ட் இதோ...

இரண்டு வழிகள் இல்லை!

“எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இரண்டு வழிகள் இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால்,  சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு நுழைவு வாயில்தான் இருக்கிறது. பகலில் பள்ளிகள் இருள் சூழ்ந்துதான் இருக்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில் காம்பவுண்ட் சுவர் உள்ளபோதிலும், கேட் வசதி இல்லை. சில பள்ளிகளில் மட்டுமே வாட்ச்மேன்கள் உள்ளனர். பள்ளிகளுக்குள் பள்ளிக்குச் சம்பந்தம் இல்லாத ஆட்கள் உள்ளே வருகின்றனர். அவர்களை வாட்ச்மேனோ அல்லது ஆசிரியர்களோ கண்டித்தால் பதிலுக்கு மிரட்டுகின்றனர். சென்னையில் புல்லாரெட்டி அவென்யூவில் இருக்கும் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் மட்டும்தான் கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும், அவை சுத்தமாகப் பராமரிக்கப்படவில்லை” என்றார், சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்