பசங்களுக்கு வயசு 17 ஆகிவிட்டதா? - இதை அவசியம் படியுங்கள்!

Special ஸ்டோரி!

‘ஜென் இஸட்...’ இன்றைய அவசர யுகத்தின் முத்திரை வார்த்தை. ‘ஜென் இஸட்’ என்றால் என்ன என்று தெரியவில்லையா?

அப்படியானால், நீங்கள் ஏறத்தாழ ‘ஜென் இஸட்’ இல்லை எனக் கணித்துவிடலாம்.

‘ஜெனரேஷன் இஸட்’ என்பது இதன் விரிவாக்கம். இந்தியாவின் மிகப் பெரிய சக்தி என்று வர்ணிக்கப்படும் ‘ஜென் இஸட்’ தலைமுறையினர், 1995-க்குப் பிறகு பிறந்தவர்கள். அதாவது, இன்றைய தேதியில் 17 - 21 வயதில் உள்ளவர்கள். இவர்கள் பிறக்கும்போது உலகமே டெக்னாலஜியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இவர்களால் எந்தச் சிரமும் இன்றி அலைபேசி, கணினிகளைக் கையாள முடியும். தொழில்நுட்பத்தின் நண்பர்கள், எதையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்பவர்கள், படைப்பாற்றல் மிக்கவர்கள், ஒரே நேரத்தில் பல தளங்களில் இயங்குபவர்கள், வேகமாக முடிவெடுத்துச் செயல்படுபவர்கள் ஆகியவை ஜென் இஸட் தலைமுறையின் குணாம்சங்கள். தொழில்நுட்பத்தையே சுவாசிக்கிற, தினம் தினம் புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்கிற இவர்களுக்கு வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், எதையும் எளிதில் கிரகிக்கும் தன்மையும் உண்டு.

இவ்வளவு பாசிட்டிவ் அம்சங்கள் கொண்ட அவர்களுக்கு நிறைய பிரச்னைகளும் உண்டு. பள்ளிப் பருவம் முடிந்ததும் வெளியூரில் போய் தங்கிப் படிப்பதையே சமூக அந்தஸ்தாகப் பார்க்கும் நிலையில்தான், பெரும்பாலான பெற்றோர்களும், ஜென் இஸட் தலைமுறையினரும் இருக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியே சென்று தங்கும்போது பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

கண்காணிப்பு மிஸ்ஸிங்! 


வெளியூர் சென்று தங்கும்போது பெற்றோர்களின் கண்காணிப்பை இழக்கிறார்கள். இது, அவர்களை எளிதில் மற்ற விஷயங்களை நாட வைக்கிறது. அவர்களுக்கு ஆதரவாகக் கிடைக்கும் முதல் விஷயம் நட்பாக இருக்கிற‌து. ஒரே பாலின நட்பு என்பது தவறான பழக்கவழக்கங்களுக்கு இட்டுச் செல்கிறது. எதிர்பாலின நட்பாக இருந்தால், அது காதலாக மாறுகிறது. இவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல் பெரும்பாலும் இவர்களின் செயல்திற‌னைக் குறைப்பதாக உள்ளது. சரியான நட்பு கிடைப்பவர்கள் தங்களை அந்த இடத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறார்கள். அப்படிக் கிடைக்காதவர்கள் தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

நட்பு வட்டம் எளிது!

இது, மனரீதியாக எளிதில் எமோஷனலாகக் கூடிய தலைமுறை. எனவே, ஆறுதல் தருபவர் களுடன் உடனே தங்களுக்கான உறவை வலுப்படுத்திக்கொள்வார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக மிக எளிதாகப் புதிய நட்பு வட்டத்துக்குள் நுழைந்துவிடுவார்கள். பல ஆண்டுகள் ஒன்றாகப் படித்து வளர்ந்தவர்கள் போல, மிக நெருக்கமாகப் புதிய நண்பர்களுடன் பழகுவார்கள். அது சில சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடும். சமூக வலைதளங்களில் ஒரே பாலின நபருடன் இந்தத் தலைமுறை பேசுவதே குறைவு என்கிறது ஓர் ஆய்வு.

திருச்சியில் இருந்து சென்னைக்குப் படிக்க வந்த எபனேசர், “சென்னைக்கு வந்தவுடன் எல்லாமே புதிதாக இருந்தது. புதிய நண்பர்களுடன் பழகுவது சற்றுக் கடினமாக இருந்தது. சென்னை போன்ற மெட்ரோ நகரத்தின் கலாசாரம் ஆரம்பத்தில் வித்தியாசமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், ‘ஊர்க்காரன்’ என்று நம்மைப் பார்த்துவிடுவார்கள். நமக்குப் பாதிப்பில்லாத கலாசார மாறுதல்களுக்குப் பழகிக்கொள்வது அவசியம்” என்றார்.

சோஷியல் ஸ்டேட்டஸ்!


இவர்கள் சந்திக்கும் இரண்டாவது விஷயம், பணம். 17 - 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக அந்தஸ்து என்பது ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கிறபோது, 50 - 100 ரூபாய் என்ற அளவில் இவர்களுக்கு பாக்கெட் மணி கிடைக்கும். கல்லூரியில் சேர்ந்தவுடன் சில ஆயிரம் எனத் தொடங்கி, வசதியைப் பொறுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இவர்களின் வங்கிக் கணக்கில் இருப்பு இருக்கும். வெளியூரில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளை பணத்துக்காகக் கஷ்டப்படக் கூடாது என்ற பெற்றோரின் கவலையே இதற்குக் காரணம். தன் வகுப்பில் படிக்கும் சிலர் ஐபோன் வைத்திருப்பார்கள். சிலர், ஸ்டார் ஹோட்டல்களில் ‘பர்த்டே ட்ரீட்’ கொடுப்பார்கள். எனவே, இவர்களும் அந்த சோஷியல் ஸ்டேட்டஸ் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பணத்துக்காகப் பெற்றோருடன் சண்டைபோடும் நிலைக்கும் இந்தத் தலைமுறையினர் போகிறார்கள்.

பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, “இந்தத் தலைமுறையினர் எல்லாவற்றிலும் வித்தியாசமானவர்கள். அவர்கள் கல்லூரிக்கு வரும்போது சந்திக்கும் பிரச்னைகளில் முதன்மையானது ‘ஹோம் சிக்’. வெளியூரில் வந்து தங்கிப் படிக்கும் பெண்ணோ, பையனோ சனி, ஞாயிறு என்றாலே வீட்டுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குச் சரியான நண்பர்கள் கிடைத்து விட்டால் ஹோம் சிக் குறைந்துவிடும். பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் சோஷியல் ஸ்டேட்டஸ் பார்ப்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நண்பர்கள் வட்டத்தில் மது அருந்தாத ஒருவர் இருந்தால், அவரைத் தனித்துப் பார்ப்பது இந்தத் தலைமுறையில் அதிகமாக இருக்கிறது. இதைச் சமாளிக்க வேண்டும் என்றால், இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று, அந்த நட்பு வட்டத்தைவிட்டு விலகுவது. இன்னொன்று, மதுவுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வது. சமூக வலைதளங்களில் ஆறுதல் தேடும் இந்தத் தலைமுறை எதிர்பாலினத்தவருடன் எளிதில் காதல் வயப்படுகிறது. காதல் நிராகரிக்கப்பட்டால் அதிகமாக ஃபீல் செய்தாலும்கூட, அதில் இருந்து வெளியேறுவது இந்தத் தலைமுறைக்கு எளிதாக இருக்கிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்