மிஸ்டர் கழுகு: தேதி குறிக்க தாமதம் ஏன்?

லைமைச் செயலகம், அறிவாலயம், போலீஸ் ஏரியா என சுற்றித் திரிந்துவிட்டு, அலுவலகம் வந்தார் கழுகார். ‘‘செய்திகள் நிறைய இருக்கும்போல’’ என்று கேட்டதற்கு, ‘‘ஆம்’’ என்று தலையை மட்டும் அசைத்தார். வரிசையாகக் கேள்விகளை வைத்தோம்.

‘‘கடந்த வாரம், ‘காணாமல்போகும் அரசு நில அபகரிப்பு - பின்னணியில் அமைச்சர்’ என்ற தலைப்பில், வீட்டுவசதி வாரிய முறைகேடுகளைப் பற்றிச் சொல்லியிருந்தீரே? அதற்கு ஏதாவது ஃபாலோ அப் இருக்கிறதா?’’

“ஜூ.வி வெளியானதும், வீட்டுவசதி வாரியத்தில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. கடந்த ஒரு வருடத்தில், கே.கே.நகர் கோட்டத்தில், வாரியம் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் எவ்வளவு? பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டு வசதிவாரிய நிலங்கள் எத்தனை? அதை வாங்கியவர்கள் யார்? அவர்கள் மூலம் யாருக்கு ‘பவர்’ கொடுக்கப்பட்டுள்ளது என்ற மொத்த விவரங்களையும் தயார்செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வீட்டுவசதி வாரியச் செயலாளர் டி.பி.யாதவ் தனியாக ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு, அதில் மற்ற ஃபாலோ அப் செய்திகளைத் தருகிறேன்” என்றவர், கோட்டை வட்டாரச் செய்திகளுக்கு வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்