மதுரையில் இன்னொரு அராஜகம்!

பினாமிகளின் கையில் கல்குவாரிகள்...

 

துரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையாம்பாட்டி கல்குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்தபோது மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றன.

பல ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் நடந்துவந்த கிரானைட் கொள்ளை, சகாயம் ஐ.ஏ.எஸ் குழுவின் ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்தது. கிரானைட் குவாரி வழக்குகள் இப்போது நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன. இந்த விவகாரத்தால் அனைத்துக் குவாரிகளுக்கும் தடை போடப்பட்டது.
“கிரானைட் குவாரிகள் மீதுதானே புகார்கள், சாதாரண கல் உடைக்கும் குவாரிகளுக்கு அனுமதி அளியுங்கள், பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்” என்று, சிலர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். உடனே மாவட்ட நிர்வாகம், இதுதான் ‘வாய்ப்பு’ என்று கடந்த வருடம் கல்குவாரிகளுக்குத் தாராளமாக அனுமதி அளித்தது. கிரானைட் குவாரிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கல்குவாரிகளும் தோண்டத்தோண்ட லாபம்தான். மாவட்டச் சுரங்கத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியுடன், பினாமிகள் பெயர்களில் ஏலம் எடுத்து அரசு அனுமதித்த அளவுக்கு மேல் மலைகளை உடைக்க ஆரம்பித்து, வருமானத்தைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.

சேகர் என்பவர் நடத்திவரும் குவாரியில் வெடிவைக்கும் பணியில் பெருமாள்பட்டியைச் சேர்ந்த ராமு, நடுப்பட்டியைச் சேர்ந்த நல்லையன், தெத்தூர் செந்தில்குமார் மற்றும் கொண்டையம்பட்டி சுதர்சன் உள்ளிட்ட தொழிலாளர்கள் கடந்த 8-ம் தேதி ஈடுபட்டிருந்தனர். வெடி வெடித்ததும் திடீர் என்று குவாரிக்குள் அதிக அதிர்வு ஏற்பட்டு மணல் சரிந்துள்ளது. கயிற்றில் தொங்கியபடி வெடிவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பிடிமானத்துக்காகப் பிடித்திருந்த கற்களும் சரிய ஆரம்பித்தன. அதனால், 300 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பாறைகளுக்குள் சிக்கி மூன்று பேரும் உயிரிழந்தனர். சுதர்சன் என்பவர் காயங்களுடன் உயிர்தப்பினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்