தமிழகத்தை மிரட்டிவரும் கூலிப்படைகள்!

Special ஸ்டோரி!

கூலிப்படைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் மிக அபாயகரமான சூழல் நிலவுகிறது.  

அரசியல், தொழில்போட்டி போன்ற காரணங்களுக்காகக் கூலிப்படையை வைத்து எதிராளிகளைப் போட்டுத்தள்ளுவது என்று இருந்த நிலைமை இப்போது, கணவனை காலி செய்ய மனைவியும், மனைவியின் கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ள கணவனும், மருமகனை தீர்த்துக்கட்ட மாமியாரும்... எனக் குடும்பப் பிரச்னைகளுக்குக்கூட கூலிப்படையை அனுப்பி ஆளை அட்ரஸ் இல்லாமல் ஆக்கும் கலாசாரம் தமிழகத்தை மிரட்டி வருகிறது.

கூலிப்படையின் பின்னணி!

பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் கொலை செய்பவர்களே கூலிப்படையினர். ஒருவரின் கதையை எப்படி முடிக்க வேண்டும் என்று ‘ஸ்கெட்ச்’ போட்டுக் கொடுக்கத் தனி டீம், அதைச் செயல்படுத்த ‘ஆபரேஷன்’ டீம், கொலை செய்ய வேண்டிய நபரின் நடமாட்டத்தைக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்க ‘ஒற்றர்கள்’ டீம் என கூலிப்படைகளில் தனித்தனி டீம்கள் உண்டு. பணம் கொடுப்பவர்களே இவர்களின் எஜமானர்கள்.

தமிழ்நாட்டில் ஏராளமான கூலிப்படை குழுக்கள் செயல்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே கூலிப்படையில் அதிகம். இதில், 20 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்பதும், 18 வயது நிரம்பாத மைனர்களும் உண்டு என்பதும் அதிர்ச்சித் தகவல். கூலிப்படை கொலையாளிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் சசிகுமார் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியிருப்பார். ஜாலியாக ஊருக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் இளவட்டப் பசங்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யும் அரசியல் புள்ளி ஒருவர், அதற்குப் பிரதிபலனாக சென்டிமென்டாகப் பேசி கொலை செய்யத் தூண்டுவார். அவர்கள் சிறைக்குச் சென்ற பிறகு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். சிறைக்குள் ஏற்படும் நட்புக்காக வெளியில் வந்து மீண்டும் அவர்கள் கொலை செய்யவார்கள். அவர்களின் வாழ்க்கை அதே திசையிலேயே போகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்