“நானும் ஜெயலலிதாவும் விடுதலை பெற்றுவிட்டோம்!”

மனம் திறக்கும் பழ.கருப்பையா!சந்திப்பு

‘ரோமாபுரி பாண்டியன்’ நாடக நிறைவு விழாவில், “நான் மனதார தி.மு.க-வில் ஏற்கெனவே இணைந்து விட்டேன்” என்று பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ  பழ.கருப்பையா, அறிவாலயத்தில் தான் எழுதிய ‘மகாபாரதம்’ புத்தகத்தை கலைஞருக்கு வழங்கி, “மனதாலும் உடலாலும் வாக்காலும் நான் தி.மு.க-வில் இணைந்து விட்டேன்” என்று அறிவித்தார். தி.மு.க-வில் இரண்டாவது முறையாக இணைந்தது குறித்து கருப்பையாவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘மீண்டும் தி.மு.க-வில் இணைந்ததற்குக் காரணம் என்ன?’’


‘‘ஜெயலலிதா திராவிட இயக்கத்துக்குள் ஊடுருவியது, திராவிட இயக்கத்தின் வலிமையைக் கூட்டியது என்று நான் நினைத்தேன். ஆனால், திராவிட இயக்கத்தில் ஊடுருவிய ஜெயலலிதா அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தாரே தவிர, அதற்குப் பயன்பட்டவர் இல்லை. திராவிட இயக்கத்தை நீர்த்துப்போகும்படி செய்வதுதான் ஜெயலலிதாவின் கொள்கையாக இருந்தது. இதுவும் திராவிட இயக்கம் என்று கருதிதான் அ.திமு.க-வில் நுழைந்தேனே தவிர, அது பெயருக்குத்தான் திராவிட இயக்கம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. உள்ளே நுழைந்த பிறகுதான் படிப்படியாக ஜெயலலிதாவின் உண்மை நிறம் தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கும் என்னைப் பற்றி தெரியவில்லை என்பதுதான் என்னை அவர் உள்ளேவிட்டதன் காரணம். அது தெரியவந்ததும் என்னை ஒதுக்கிவைத்தார். இப்போது நாங்கள் இருவருமே விடுதலை பெற்றுவிட்டோம். அ.தி.மு.க-வில் இருந்தபோதே கலைஞரைப் பற்றிய என்னுடைய எண்ணங்கள் மென்மைப் பட்டுவிட்டன. நிழலின் அருமை வெயிலிலேதான் தெரியும். கலைஞர் மீது எனக்கு மதிப்பு உயர்வதற்கு ஜெயலலிதா காரணமாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்