முகங்கள் - ஸ்ரீராம்

ந்திய அளவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சி.ஏ (சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ்) தேர்வின் முடிவு 18-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவர் 800 மதிப்பெண்களுக்கு 613 மதிப்பெண்கள் (76.63 சதவிகிதம்) பெற்று இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.  அம்மாப்பேட்டையில் அவரைச் சந்தித்தோம்.

‘‘உங்களைப் பற்றி...?’’

‘‘அப்பா பெயர் சீனிவாசன். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதுநிலை தொழில்நுட்ப வல்லுநராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அம்மா பத்மா மாவட்ட நூலக அலுவலராகப் பெருமலூரில் பணியாற்றுகிறார்.’’

‘‘சி.ஏ படிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?’’

‘‘சி.ஏ., படிக்க ஐ.சி.ஏ.ஐ (இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா) நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டும். இந்த இன்ஸ்டிட்யூட்டின் கிளைகள் இந்தியா முழுவதும், பெரும்பாலும் எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்றன. அதில் சேர்ந்து படிக்கலாம்.

மெடிக்கல், இன்ஜினீயரிங் படிக்க, ப்ளஸ் டூவில் ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் படித்தால் மட்டும்தான் அந்தப் படிப்பில் சேரமுடியும். ஆனால், ப்ளஸ் டூவில் நாம் எந்தப் பாடப்பிரிவுகள் எடுத்துப் படித்து இருந்தாலும் சி.ஏ படிக்க முடியும். முதலில் CPT எனப்படும் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.  இதில் தேர்வு பெற்ற உடன் இடைநிலைத் தேர்வு எழுதவேண்டும். பி.காம் முடித்தவர்கள் நேரடியாக இன்டர் தேர்வு எழுதலாம். அதன் பிறகு 3 வருடங்கள் ஆடிட்டர் அலுவலகத்தில் பயிற்சி செய்ய வேண்டும். இதன் பின்னர் இறுதித் தேர்வு எழுத வேண்டும். மொத்தம் 4 வருடங்கள் ஆகும்.

நான் இந்தப் படிப்பில் 2012-ல் சேர்ந்தேன். 2013-ல் இடைநிலைத் தேர்வு (இன்டர்)  எழுதினேன். அதில் 700 மதிப்பெண்களுக்கு 551 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 7-வது இடத்தைப் பெற்றேன். தற்போது 2016-ல் இறுதித் தேர்வு எழுதி இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கிறேன்.’’

‘‘ஏழை மாணவர்கள் இந்தப் படிப்பைப் படிக்க முடியுமா?’’

‘‘நிச்சயமாகப் படிக்க முடியும். இந்தப் படிப்பைப்  பொறுத்தவரை இடஒதுக்கீடு கிடையாது. இன்டர் எக்ஸாமில் நான் இந்திய அளவில் 7-வது இடத்தில் வந்ததற்காக மாதம்தோறும் 2,000 ரூபாய் ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள். சி.எஸ் (கம்பெனி செகரட்டரி) இன்டர் எக்ஸாமில் இந்திய அளவில் முதலிடத்தில் வந்ததற்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பொதுவாக ஆடிட்டரிடம் பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையாக மாதம்தோறும் 2,500 ரூபாய் கொடுக்கிறார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்