சிஷ்யா... கபாலி... மகிழ்ச்சி!

சந்தோஷம்

சென்னை அடையாறில் உள்ள ‘சிஷ்யா’ பள்ளி மாணவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் போனார்கள்.

இது ஒரு செய்தியா?

அப்படிப்போன மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள் என்றால், அதுவும் செய்தியா எனக் கேட்கக் கூடாது. சிஷ்யா பள்ளி மாணவர்களை தலைமைச் செயலகத்தில் தனது அலுவலகத்துக்கு அழைத்து உரையாடி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

முதல்வர் அறையில் ஜெயலலிதாவை மாணவர்கள் ஒவ்வொருவராகச் சந்தித்தனர். அவர்களுக்கு dairy milk சாக்லேட்களைக் கொடுத்தார். ஜெயலலிதாவைச் சந்தித்ததே இன்ப அதிர்ச்சியான மாணவர்களுக்கு அவரின் கையில் இருந்து சாக்லேட் வேறு கிடைத்ததும் அவர்களின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பு. ஜெயலலிதா சிரித்தபடியே சாக்லேட்களை நீட்ட... அதை வாங்கிய மாணவர்கள் மறக்காமல் ‘தேங்ஸ்’ என்றார்கள். சாக்லேட் கொடுத்தபோது ஒரு மாணவிக்கு மட்டும் ஜெயலலிதாவின் முத்தம் கிடைத்தது. மாணவர்களோடு வந்த டீச்சர்கள் மூன்று பேருக்கும் சாக்லேட்களைக் கொடுத்தார் ஜெயலலிதா. அதன்பிறகு, மாணவர்களோடு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். அதில், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவும், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும் இருந்தார்கள். மாணவர்களின் யூனிஃபார்ம் நிறத்திலேயே ராம மோகன ராவும் டிரஸ் போட்டிருந்ததால், அவரும் மாணவர்போலவே இருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்