‘‘அதே மேன்ஷனில் 8 மாதங்களுக்கு முன்...’’

சுவாதி வழக்கில் புதிய திருப்பம்!விசாரணை

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது தனிப்படை போலீஸ். அப்போது அவர், சுவாதியை எப்படிக் கொலை செய்தேன் என்ற தகவலை விரிவாகச் சொன்னதாக போலீஸ் சொல்கிறது.

அவருடைய வாக்குமூலத்தை போலீஸ் தரப்பில் இருந்து சேகரித்தோம். அதில், “பி.இ படிப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு கோச்சிங் கிளாஸுக்காக சென்னை வந்தேன். என் உறவினர் மதன் உட்பட செங்கோட்டையைச் சேர்ந்த 7 பேர் சூளைமேட்டில் உள்ள ஏ.எஸ் மேன்ஷனில் தங்கியதால், நானும் அங்கு தங்கினேன். அந்த வழியாகச் சென்ற சுவாதியைப் பார்த்தேன்.  அவரைப் பின்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரை ரயிலில் மூன்று முறை சென்றேன். அப்போது, சுவாதி வேலை பார்த்த இடத்தைக் கண்டுபிடித்தேன். சுவாதி தினமும் அவரது வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்வார். சுவாதிக்காக அந்தக் கோயிலுக்கு நானும் செல்வேன். ஒருநாள் அவரிடம் என் காதலைச் சொன்னேன். அவர் என்னை, ‘தேவாங்கு’ என்று திட்டியதோடு கன்னத்தில் ஓங்கி அடித்தார். அது எனக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது அரிவாளை எடுத்து வந்தேன். சுவாதியை கொலை செய்வதற்கு முன்புகூட அவரிடம் என் காதலை வெளிப்படுத்தினேன். அப்போதும் அவர், என்னை அசிங்கமாகத் திட்டினார். இதனால் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வாயிலேயே ஆத்திரம் தீர வெட்டினேன்” என்று போலீஸில் சொல்லி இருக்கிறார் ராம்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்