நீதிபதிகள்... வழக்கறிஞர்கள்... சம உரிமை!

தொடரும் நீதிமன்ற போராட்டம்மோதல்

ராண்டுக்கும் மேலாக சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகைந்து கொண்டிருந்த விவகாரம், தற்போது தீப்பிடிக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், புதிய நீதிபதிகள் நியமனத்துக்காக, 12 பேர் பட்டியல் ஒன்றை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பெயர்ப் பட்டியல், வழக்கறிஞர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் அனுப்பப்பட்ட அந்தப் பட்டியலில், தகுதியற்றவர்களின் பெயர்கள் உள்ளன.  குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று போராட்டத்தில் வழக்கறிஞர்கள் குதித்தனர். அதுதான், நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்குமான முதல் உரசல். அதில் உருவான பொறி, ‘ஹெல்மெட்’ கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் தீயாகப் பற்றியது. ‘நீதிபதிகளின் ஊழல் பட்டியல்கள்’ என்று வழக்கறிஞர்கள் பேனர் வைத்தனர். தமிழை வழக்காடு மொழியாக்கவேண்டும் என்று சொல்லி,  தலைமை நீதிபதி முன்பு கோஷம் போட்டனர். உயர் நீதிமன்றப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தகராறு ஏற்பட்டது. இவை அனைத்தையும் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக 44 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு, அடுத்த பேரதிர்ச்சியாக வந்தது, வழக்கறிஞர் சட்டத் திருத்தம்.

அந்தப் புதிய சட்டத்தில், நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரிகளுக்கு எதிரான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, மேல் நீதிமன்றங்களுக்குப் புகார் அனுப்புவது; நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அறைகளில் போராட்டம் நடத்துவது; நீதித்துறை மற்றும் நீதிபதிகளுக்கு எதிராகக் கண்டனங்கள் அடங்கிய போர்டுகளைக் காண்பிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வரை தடை விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இது, நீதிபதிகளுக்குப் பிடிக்காத வழக்கறிஞர்களைப் பழிவாங்குவதற்காகவே கொண்டு வரப்பட்டு உள்ளது என்று கொந்தளித்த வழக்கறிஞர்கள், காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றமும் அகில இந்திய பார்கவுன்சிலும், 126 வழக்கறிஞர்களை ஒரே நாளில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்