மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

ழுகார் நுழைந்ததும், ‘‘ ‘கபாலி’ பார்த்தாச்சா?” என்ற கேள்வியைப் போட்டோம்.

‘‘ ‘கபாலி’ படத்தைவைத்து கிளம்பும் வசூல் சர்ச்சை தகவல்களுடன் நான் வந்திருப்பது தெரிந்து இந்தக் கேள்வியைப் போடுகிறீரா?” என்றபடி செய்திகளைக் கொட்டினார் கழுகார்.

‘‘ ‘கபாலி’ ஜுரம் தணிய இன்னும் சில நாட்கள்கூட பிடிக்கும். அந்தப் படத்தில் பேசப்பட்டு இருக்கும் அரசியலும், படத்தைத் தயாரித்தவர்கள் செய்யும் அரசியலும் ‘கபாலி’ ஜுரத்தைத் தணியாமல் வைத்திருக்கிறது. அதனால், அதன் வசூலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது. இதன் வர்த்தகத்தைப் பற்றி மட்டும் நான் சொல்கிறேன்.  ‘கபாலி’ திரைப்படம், வெளிநாடுகளில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. வெளிமாநிலங்களைப் பொறுத்தவரை, 2 ஆயிரத்து 870 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 640 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.”

‘‘படத்தின் வசூல் எப்படியாம்?”

‘‘தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை வசூல், 60 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் மூன்று நாள் வசூல் என்று தயாரிப்புத் தரப்பு சொல்லும் தொகையைக் காட்டிலும் கூடுதலான வசூலை, படம் வெளியான முதல்நாளே பார்த்துவிட்டதாம். அதாவது, படம் வெளியான வெள்ளிக்கிழமையன்றே, 80 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாம்.”

‘‘அது என்ன கணக்கு?”

‘‘தமிழகத்தில் 640 தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. சாதாரணமாக, ஒரு தியேட்டருக்கு 250 சீட்கள் என்று வைத்துக் கொண்டால், ஒரு லட்சத்து 60 ஆயிரம் சீட்கள். படம் வெளியான முதல் நாள், அனைத்தும் ‘ஹவுஸ் புல்’ காட்சிகள். 5 காட்சிகளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் சீட்கள் என்று வைத்துக்கொண்டால், 8 லட்சம் டிக்கெட்டுகள் முதல் நாள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் ஒப்புக்கு 10 முதல் 20 டிக்கெட்களை ஒவ்வொரு தியேட்டரும் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு விற்றுவிட்டு, மற்ற டிக்கெட்களை பிளாக்கில் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை விற்றனர். சில இடங்களில் 2,000 ரூபாய்கூட விற்றனர். ஆனால், சராசரியாக 1,000 ரூபாய் என்று கணக்குப்போட்டாலே முதல் நாள் டிக்கெட் விற்பனை மட்டும் ரூ.80 கோடி. சனி, ஞாயிறுக் கிழமைகளில் 6 காட்சிகள் திரையிடப்பட்டன. அதற்குக் கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 96 கோடி ரூபாய் என்று இரண்டு நாட்களில் 192 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆக மொத்தமாக மூன்று நாள் வசூலைக் கணக்கிட்டாலே, 200 கோடி ரூபாயை ‘கபாலி’ தாண்டிவிட்டது. இந்தக் கணக்கு தமிழகத்துக்கு மட்டும்தான். இதுபோக, ரஜினி படத்துக்கு நல்ல கிராக்கி உள்ள ஆந்திராவில் 520 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 500 தியேட்டர்​களிலும், கேரளாவில் 480 தியேட்டர்களிலும் வட மாநிலங்களில் 1,370 தியேட்டர்களிலும் ‘கபாலி’ திரையிடப்பட்டுள்ளது. வசூல் எவ்வளவு ஆகியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.”

‘‘தியேட்டர்களில் கூடுதல் விலைக்கு விற்க முடியாது அல்லவா?”

‘‘தியேட்டர் கவுன்டரிலேயே டிக்கெட்கள் கூடுதல் விலைக்குச் சர்வ சாதாரணமாக விற்கப்பட்டன. டிக்கெட்டில் 60 ரூபாய், 90 ரூபாய், 110 ரூபாய் என்று அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால், கவுன்டரில் 600 ரூபாய், 1,000 ரூபாய் என்று வசூல் செய்துள்ளனர். அதுபோக, சில இடங்களில் கவுன்டரில் ஒப்புக்கு 20 டிக்கெட்களை கொடுத்துவிட்டு மற்றவற்றை பிளாக்கில் விற்றுவிட்டனர். ஆன்லைன் புக்கிங்கிலும் இதே தில்லுமுல்லுகள் நடந்துள்ளன. 10 ரூபாய் டிக்கெட்களை ஆன்லைனில் விற்கக் கூடாது. ஆனால், இந்த முறை 10 ரூபாய் டிக்கெட்டையே ஆன்லைனில் விற்றனர். அதையும் ஆன்லைனில், 100 ரூபாய் என்று 10 மடங்கு அதிக விலைவைத்து விற்றனர். அதை மட்டும் விற்றுவிட்டு மற்ற சீட்களை தியேட்டர்காரர்களே பிளாக் செய்து வைத்துவிட்டு, அதை ஐ.டி நிறுவனங்களிடம் விற்றுவிட்டனர். இப்படிப் பல தில்லுமுல்லுகள் சர்வசாதாரணமாக நடந்தன. ஆனால், காவல் துறை, வருமானவரித் துறை உட்பட அனைத்துத் துறைகளும் இதை வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தன. படம் நடித்தவர், படம் எடுத்தவர், விநியோகஸ்தர் என எல்லாமே படா டீம் என்பதால், எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தனர்” என்றபடி அரசியல் மேட்டருக்கு வந்தார் கழுகார்.

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் டெல்லி ராகுல் காந்தி வீட்டில் அதற்கான பணிகள் நடந்தன. இரண்டு நாட்களாக ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் பிரமுகர்களான திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர், நாமக்கல் ஜெயக்குமார், கோபிநாத், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், வசந்தகுமார், விஜயதரணி போன்ற ஒன்பது பேரைச் சந்தித்துள்ளார். ராகுலிடம் மாறி மாறி ஒருத்தருக்கொருத்தர் புகார்களை அள்ளி வீசியுள்ளனர். இப்போதே திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களுக்கும் சுதர்சன நாச்சியப்பனின் ஆதரவாளர்களுக்கும் கடுமையான மோதல் தொடங்கிவிட்டது. பி.ஜே.பி-யைப்போல பெண் தலைவரை தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கும் திட்டமும் ராகுலிடம் இருக்கிறதாம்.”

‘‘ம்!”

‘‘ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்து, நால்வர் அணியில் கால்பதித்து அமைச்சராக வலம்வந்து, மக்கள் மனதில் இடம்பிடிக்காமல் போனதால் தோல்வியைத் தழுவினார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். மீண்டும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க எதிர்வரும் தஞ்சாவூர் இடைத்தேர்தலைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் என்பதுதான் அ.தி.மு.க-வினரின் கரன்ட் டாக். வைத்திலிங்கம் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வைத்திலிங்கம் எனது நம்பிக்கைக்குரியவர் எனும் விதமாக ராஜ்யசபா எம்.பி பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், வைத்திலிங்கத்துக்கு அதில் திருப்தியில்லை. எப்போதும் பார்க்கும் சிரிப்பு முகம் இல்லை, தொண்டர்களைப் பார்த்து கை அசைவு இல்லை, கடுகடு பேச்சுதான் இருக்கிறது.”

‘‘ஓஹோ!”

‘‘உள்ளாட்சித் தேர்தலுக்காகச் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவரும் வைத்திலிங்கம், ‘துரோகிகளால்தான் நான் தோற்றுப் போனேன்’ என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தஞ்சையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘துரோகிகள் எல்லாம் தி.மு.க-வுக்கு ஓடிவிடுங்கள்’ என்றும் பேசினார். அமைச்சராக இருக்கும்போது யாரும் அவரை எளிதில் சந்திக்க முடியாது. அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்தைத் தாண்டி எந்தக் கூட்டமும் போய் சந்திக்க முடியாது. ஆனால், இப்போது தஞ்சை தொகுதி நிர்வாகிகளை மட்டும் எளிதில் சந்தித்து வருகிறார். மேயர், நகரச் செயலாளர், பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என கோலோச்சி வந்தவர்களை மாற்றுவதற்கு ஆலோசனையும் நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள். ‘தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு செலவு செய்து தனக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்ற கேள்வியோடு இருக்கிறார் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி. தஞ்சை தொகுதியில் வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டால் ரெங்கசாமிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை மன்னார்குடி வகையறாக்கள் பெற்றுத் தரலாம்’ என்கிறார்கள்.”

‘‘எல்லாமே மன்னார்குடிதானா?”

‘‘மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எஸ்.காமராஜுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம். கூடவே, மாவட்டச் செயலாளர் பதவியையும் மன்னார்குடி தரப்பினர் அவருக்குப் பெற்றுத்தர வாய்ப்பு இருக்கிறது.”

‘‘மத்திய அரசை தாஜா செய்யத் தொடங்கிவிட்டாரே ஜெயலலிதா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்