சட்டமன்றத்துக்குள் சர்ச்சை மனிதர்கள்!

கிரிமினல் பின்னணியில் 75 பேர்!

‘கிரிமினல் மக்கள் பிரதிநிதி’களின் எண்ணிக்கை தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த 232 எம்.எல்.ஏ-க்களில் 75 பேர் கிரிமினல் பின்னணிக் கொண்டவர்கள். தேர்தல் களத்திலும் மக்கள் மன்றங்களிலும் கிரிமினல்கள் கோலோச்சுவது தொடர்கதையாகி வருகிறது. அது இந்தத் தேர்தலிலும் நிஜமாகியிருக்கிறது.

2006 சட்டசபைத் தேர்தலில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தவர்களில் 77 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. அதாவது, மொத்த சட்டசபை உறுப்பினர்களில் இது 33 சதவிகிதம். இந்த 77 பேரில் 25 பேர் மீது மிகவும் மோசமான கிரிமினல் வழக்குகள் இருந்தன. மொத்தமாக இந்த 77 பேர் மீது போடப்பட்ட வழக்குகளின் எண்ணிகை மட்டும் 176. கொலை, கடத்தல் போன்ற இ.பி.கோ-வின் 52 செக்‌ஷன்கள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்