தொழிலாளர்களை உதைத்தவர் தொழிலாளர் அமைச்சரா?

சர்ச்சைக்குரிய அமைச்சர்கள்

மைச்சர்கள் அடிக்கடி பந்தாடப் படுவதால், ‘மியூசிக்கல் சேர்’ என்று ஜெயலலிதா அமைச்சரவை வர்ணிக்கப்படுவது உண்டு. தேர்தலில் வென்று புதிய அமைச்சரவை பதவியேற்ற சில மணி நேரத்திலேயே அமைச்சரவையை மாற்றி அமைத்து அதிரடியைத் தொடர்ந்தார், ஜெயலலிதா. கூடுதலாக நான்கு பேர் கேபினெட்டுக்குள் வந்துள்ளார்கள். புகார்கள், அதிருப்திகள் உட்பட ‘அம்மா கேபினெட்’ மீது  விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. அதுபற்றிய ரிப்போர்ட் இது.

ப்ளஸ்... மைனஸ்!

அமைச்சர்கள் பட்டியல் வெளியான உடனே ஒரு சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகுதான் புதிதாக நான்கு அமைச்சர்களை அறிவித்தார்கள். இப்போதுகூட காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பைக் கணக்கில்கொண்டு கன்னியாகுமரி மாவட்ட அமைச்சரான பச்சைமாலின் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த மாவட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் யாருக்குமே அமைச்சர் அந்தஸ்து கிடைக்கவில்லை. இந்த முறை கன்னியாகுமரியில் யாருமே வெற்றி பெறாததால் அந்த மாவட்டத்துக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைக்கவில்லை. அதனால்தானோ, என்னவோ அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இப்போது அரியலூர் ராஜேந்திரனுக்கு மட்டும் அரசு கொறடா பதவியைக் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் தோப்பு வெங்கடாசலம் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகியிருந்தார். இப்போது, பவானி தொகுதி எம்.எல்.ஏ-வான கருப்பண்ணனுக்கு இந்தத் துறை வழங்கப்பட்டுள்ளது. கருப்பண்ணனுக்கு அமைச்சர் பதவி கிடைத்த உடனே, அவர் சாராய வழக்கில் சிக்கியவர் என்ற புகார் வாட்ஸ்அப்பில் வலம்வந்தது. பதவி கிடைக்காத கோபத்தில் யாரோ கிளப்பிய வதந்தி எனச் சொல்லப்பட்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்