யாருக்குச் சொந்தம் 570 கோடி?

15 நாட்கள் ஆகியும் விலகாத கன்டெய்னர் மர்மங்கள்...

மிழக சட்டமன்றத் தேர்தலின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

கோவையில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மூன்று கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் கொண்டு சென்றபோது, தேர்தல் அதிகாரிகள் மடக்கிப்பிடித்துப் பறிமுதல் செய்தனர். ‘570 கோடியும் எங்களுடையது’ என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்து, பணத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. அதன் பின்னரும் மர்மங்கள் விலகவில்லை. உண்மையில், அந்த 570 கோடி ரூபாய் யாருடையது... ஏன் கொண்டு செல்லப்பட்டது? என்ற கேள்விகளுக்குச் சரியான பதில்கள் இல்லை. பணம் கொண்டு செல்லப்பட்டதில் எழுந்துள்ள சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும் என்றும், அதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  த.மா.கா வலியுறுத்தி உள்ளது.

த.மா.கா இளைஞர் அணித்தலைவர் யுவராஜாவிடம் பேசினோம்.

“தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை, சாதாரண வியாபாரி 20 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றாலே அதைப் பறிமுதல் செய்தார்கள். ஆனால், எந்த முன்னறிவிப்பும், முன் அனுமதியும் இல்லாமல், மே 13-ம் தேதி இரவு 12 மணி அளவில் செங்கப்பள்ளி அருகே காவல் துறை கட்டுப்பாட்டை மீறி 3 கன்டெய்னர்களில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது. 18 மணி நேரம் கழித்துத்தான், அந்தப் பணத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உரிமை கோரியது. இதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. பணம் இடம் மாற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி சொல்லியுள்ளது. அதில், ஒன்றைக்கூட இவர்கள் செய்யவில்லை.

முதலில் ஒரு வங்கியில் இருந்து பணத்தை எவ்வளவு டிரான்ஸ்ஃபர் செய்தாலும் அதை வீடியோ ரெக்கார்டிங் செய்யவேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதி உள்ளது. ஆனால், 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில், வீடியோ ரெக்கார்டிங் பண்ணவில்லை. அதை அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள். அடுத்து வெள்ளிக்கிழமை பண டிரான்ஸ்ஃபர் செய்யக் கூடாது என்ற ரிசர்வ் வங்கி விதி உள்ளது. ஆனால், இவர்கள் வெள்ளிக்கிழமை டிரான்ஸ்ஃபர் பண்ணியதாகச் சொல்கிறார்கள். ஏன் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்