ராஜ்ய சபா எம்.பி-க்களின் ப்ளஸ்... மைனஸ்!

மிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட 6 ராஜ்ய சபா எம்.பி-க்களின் பதவிகாலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வில் இருந்து 4 பேர், தி.மு.க-வில் இருந்து 2 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். 6 பேரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ராஜ்ய சபா எம்.பி-க்கள் ஆகப்போகிறவர்கள் பற்றி ஓர் அறிமுகம்...

நடிப்புக்கு நவநீதகிருஷ்ணன்!

தி.மு.க-வைச் சேர்ந்த டி.எம்.செல்வகணபதி ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் 2014-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் ஜெயலலிதா வாய்ப்புக் கொடுத்துள்ளார். 60-வயதான நவநீதகிருஷ்ணன் ஒரத்தநாடு அருகேயுள்ள, ‘பொன்னாப்பூர் மேற்கு’ என்ற ஊரைச் சேர்ந்தவர். அ.தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் ஜோதி தி.மு.க-வுக்குத் தாவிய பிறகு அந்த இடத்துக்கு நவநீதகிருஷ்ணன் கொண்டு வரப்பட்டார். சசிகலாவின் தம்பி திவாகரனும் நவநீதகிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். அதுதான் நவநீதகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்ற அட்வகேட் ஜெனரல், டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜ்ய சபா எம்.பி., இப்போது மீண்டும் அதே பதவி என நவநீதகிருஷ்ணனுக்கு லாட்டரி அடித்தபடியே இருக்கிறது.‘அம்மா, சின்னம்மாவைப் பார்த்தால் நன்றாக நடிப்பார். இளவரசியின் குடும்ப வழக்குகளை கவனித்தார். அதற்காகத் தரப்பட்ட பரிசுதான் இது” என்கிறார்கள்.

‘‘இவருக்கெல்லாமா கொடுப்பது?”

கோவை பல்லடம் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் 80 வயதாகும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன். மத்திய இணை அமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கவர்னர் பதவியை எதிர்பார்த்தார். மூப்பனார் காலத்தில் அவரோடு நெருக்கமாக இருந்தவர். ஜி.கே.வாசன், த.மா.கா ஆரம்பித்தபோது கட்சியின் மூத்தத் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த ஜி.கே.வாசனை கண்டித்து த.மா.கா-வில் இருந்து விலகினார். தாய் கட்சியான காங்கிரஸில் சேராமல் அ.தி.மு.க-வில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சேர்ந்தார். அ.தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்தார். கோவை மண்டலத்தில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அந்த மண்டலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. அ.தி.மு.க-வில் பல சீனியர்கள் இருக்க, கட்சிக்குள் வந்த 32 நாட்களுக்குள் ராஜ்ய சபா சீட் கொடுத்திருப்பது அ.தி.மு.க-வினரை ஆச்சர்யத்தோடு பார்க்கவைத்துள்ளது. ஒரு காலத்தில் ஜெயலலிதாவைக் கடுமையாக சட்டமன்றத்தில் விமர்சித்த இவருக்குப் பதவி தந்திருப்பதை உண்மையான அ.தி.மு.க-வினர் விரும்பவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்