நிஜமான மாற்றமா... நிர்ப்பந்த மாற்றமா?

ஜெ. அணுகுமுறை!

தவி ஏற்பு விழாவில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை, கட்-அவுட்கள் இல்லாத சாலை, காலில் விழ அமைச்சர்களுக்குத் தடை என திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்தது. அது தொடர்பாக விளக்க அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா, “பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பது தெரிந்திருந்தால் முன்வரிசையில் உட்காருவதற்கு இடம் ஒதுக்கியிருப்போம். தி.மு.க-வையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை” என்று சொல்லியிருந்தார். மேலும் அதில், தி.மு.க-வுக்கும் ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், “மாநில மேம்பாட்டுக்காக இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதாவிடம் ஏற்பட்டிருப்பது உண்மையான மாற்றமா அல்லது அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஏற்பட்ட மாற்றமா? என்ற கேள்விகளை அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரிடம் முன்வைத்தோம்.

தமிழிசை செளந்தரராஜன் (மாநிலத் தலைவர், பி.ஜே.பி.):
“டாஸ்மாக் நேரத்தைக்  குறைத்தது, 500 கடைகளை மூடியது, 100 யூனிட்  மின்சாரத்தை இலவசமாக வழங்கியது என தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் சூழலை முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தி உள்ளார். பதவி ஏற்பு விழாவில் விளம்பரப் பலகைகள் வைக்காதது, அமைச்சர்கள் -  சட்டமன்ற உறுப்பினர்களைக் காலில் விழ வேண்டாம் என்று கூறியிருப்பது, எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கொடுத்திருப்பது, இவையெல்லாம் ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளது. இதை வரவேற்போம்.”

ஜி.ராமகிருஷ்ணன், (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): “2002-ல் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த பேராசிரியர் அன்பழகனுக்கு 6-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அதற்கு, அப்போது ஜெயலலிதா ஒரு விளக்கம் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்டாலின் இருக்கை விவகாரத்திலும் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எதிர்காலத்தில் அரசும், சட்டமன்றமும் ஜனநாயகப் பூர்வமாகச் செயல்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அரசியலில் பண்பட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அப்போதுதான் முடிவுக்கு வர முடியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்