மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்குள் அ.தி.மு.க. ஆதிக்கமா?

‘‘கலகலப்பு, உற்சாகம் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்துவிட்டது தி.மு.க செயற்குழு” என்றபடி வந்து லேண்ட் ஆனார் கழுகார்.

‘‘எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தது தி.மு.க. ஆனால், தோற்றுப் போய்விட்டது. தன்னை ஆறாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்கி விடுவார் என்று கருணாநிதி நினைத்தார். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். இந்த அப்பா - மகன் தகராறு ரிசல்ட் வந்த அன்று காலையில் தொடங்கி, இன்னும் தொடர்கிறது.”

‘‘சொல்லும்.”

‘‘தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு, புதிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் 24-ம் தேதி நடைபெற்றது. 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கருணாநிதி 9.45 மணிக்கே அரங்கத்துக்கு வந்துவிட்டார். மேடையில் இருக்க வேண்டிய பொருளாளர் ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் அதுவரை வரவே இல்லை. அவர்கள் இல்லாதது பற்றி ஆர்.எஸ்.பாரதியிடம் கருணாநிதி கேட்டார். ஏதோ இழுத்தார் பாரதி. மணி 10 ஆனதும் ‘கூட்டத்தை ஆரம்பியுங்கள்’ என்று கூறினார் கருணாநிதி. யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. துரைமுருகனைப் பார்த்து, ‘நீ பேச்சைத் தொடங்கு’ என்று கருணாநிதி கூறினார். துரைமுருகன் நெளிந்தார். மனசு நெளிந்ததே தவிர... உடம்பு நெளியவில்லை. ஸ்டாலின் வருவதற்கு முன்பே எப்படிப் பேசுவது என்று துரைமுருகன், தயக்கம் காட்டினார். அப்போது கருணாநிதிக்குப் பக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி போனார். மெதுவாக, ‘தளபதி வந்துட்டு இருக்கார். காலையில் உடல்நிலை கொஞ்சம் சரியில்லையாம். அதனால் கொஞ்சம் லேட்டாகக் கிளம்பியுள்ளார்’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். ‘ம்...’ என்றாராம் கருணாநிதி. வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. அப்போது கருணாநிதிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. அரை மணிநேரம் அசையாமல் உட்கார்ந்து இருந்தார் கருணாநிதி.”

‘‘இருக்காதா?”

‘‘10.15 மணிக்கு ஸ்டாலின், ஐ.பெரியசாமி ஆகியோர் வந்தார்கள். நேராக மேடைக்குப் போனார்கள். கருணாநிதிக்கும் கூட்டத்துக்கும் வணக்கம் வைத்தார் ஸ்டாலின். கூட்டம் ஆரம்பமாகியது. அவர் வந்தவுடன் துரைமுருகன் பேச்சைத் தொடங்கினார். ‘தலைவரும், தளபதியும் இந்தத் தேர்தலில் கடுமையாகப் பிரசாரம் மேற்கொண்டும், நாம் சிறிய எதிர்பாராதத் தோல்வியைச் சந்தித்து இருக்கிறோம். ஸ்டாலின் உழைப்பு வீண் போகாது. அவர் நிச்சயம் முதலமைச்சராக உட்காருவார். பவருக்கு வருவோம் என்று நினைத்தோம். ஆனால், இப்போது பவர்ஃபுல் ஆகி இருக்கோம். இந்தத் தேர்தலில் வெற்றி தோல்விக்கான காரணங்களை இங்கு அலசி ஆராயலாம்’ என்று கிச்சுகிச்சு மூட்டினார். ‘விருப்பப்பட்டவர்கள் மேடைக்கு வந்து பேசுங்கள்’ என்று கூறி துரைமுருகன் தனது சீட்டில் அமர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்