"இதுதான் பிரபல பேச்சாளரை அழைக்கும் முறையா?"

பி.ஜே.பி. தலைவர்களை விளாசும் எஸ்.வி. சேகர்

ந்தச் சட்டமன்றத் தேர்தலில், பி.ஜே.பி-யின் கொள்கைப் பரப்புச் செயலாளரான நடிகர் எஸ்.வி.சேகரை பிரசார மேடைகளில் காணமுடியவில்லை.

பி.ஜே.பி படுதோல்வி அடைந்த நிலையில், எஸ்.வி.சேகர், அ.தி.மு.க-வில் சேரப்போகிறார் என்ற தகவல் றெக்கை கட்டிப்பறந்தது. தகவல் உண்மைதானா என்று அவரை சந்தித்துக் கேட்டபோது, நம்மிடம் ஒரு கடிதத்தை நீட்டினார். திரைப்பட, நாடக உலகில் செய்ய வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் குறித்து, மீண்டும் முதல்வராகி இருக்கும் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதி வைத்திருந்த கோரிக்கைக் கடிதம் அது. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இப்போது பி.ஜே.பி-யில் இருக்கிறீர்களா?”

“என்றைக்குமே நான் பி.ஜே.பி-தான். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கிறேன். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் பல பேர் லாபி செய்தபோதும் என்னை அழைத்து அந்தப் பதவியைக் கொடுத்தவர் பிரதமர் மோடி. மோடியின் தனிப்பட்ட குட்வில் புத்தகத்தில் இருக்கிறேன். நான் ஏன் கட்சி மாறவேண்டும்?”

“இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?”

“ஊர் கூடிதான் தேர் இழுக்க முடியும். நான்கு பேர் மட்டும் அதற்கு முயற்சித்தால் எப்படி நடக்கும்? திராவிடக் கட்சிகளை வீழ்த்தப்போவதாகச் சொல்பவர்கள், அந்தக் கட்சிகளின் அணுகுமுறையைக் கொஞ்சமாவது பின்பற்றக் கூடாதா? பிரசாரத்துக்காக என்னைக் கட்சியில் இருந்து முறையாக ஒருவரும் அழைக்கவில்லை. தேர்தலுக்கு முன் திடீரென தலைமையகத்தில் இருந்து ஒரு அழைப்பு. யார் என்றே சொல்லிக் கொள்ளாமல், முக்கியத் தலைவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் வருகிறார், நீங்கள் அப்படியே வந்துவிடுங்கள் என்று ஏதோ போகிற வழியில் பிக்அப் செய்து கொள்கிறேன் என்பதுபோல் சாதாரணமாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். அதற்கான நோட்டீஸிலும் என் பெயர் போடப்படவில்லை. இதுதான் பிரபல பேச்சாளரை அழைக்கும் முறையா? முறைப்படியான அழைப்பு இல்லாமல், நானே வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றிவர முடியாதல்லவா? என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்