கருணாநிதி சந்திப்பைத் தவிர்த்த ஜெயலலிதா!

ரஸ்பர வணக்கங்கள், பவ்யக் காட்சிகள், புதுமுகங்களின் திணறல்கள் எனக் கலக்கல் கலைடாஸ்கோப்பாக தமிழகத்தின் 15-வது சட்டசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆளும் கட்சிக்கு இணையாக எதிர்க் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இருப்பதால், எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்கு வந்த தி.மு.க உறுப்பினர்கள் உற்சாகமாகவே சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர்.

மே 25-ம் தேதி காலை 11 மணிக்கு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்தினம் தி.மு.க செயற்குழுவில் எதிர்க் கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். எதிர்க் கட்சித் தலைவருக்கு என தனி அறை தலைமைச் செயலகத்தில் இருப்பதால், அந்த அறையையும் அதிகாரிகள் தயார் செய்து விட்டார்கள். புதிய சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் நுழையும் வாயிலையும் முதல்வர் நுழையும் வாயிலையும் மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். காலை ஒன்பதரை மணி முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை ஆரம்பம் ஆனது. அ.தி.மு.க உறுப்பினர்கள் வருகைதான் முதலில் இருந்தது. முதல் முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், எந்த வாயிலில் நுழைவது என்ற குழப்பத்துடன் முழித்தனர். அவர்களுக்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் வழிகாட்டினர்.

10 மணி அளவில் அமைச்சர்களில் பெரும்பாலோர் சபைக்குள் என்ட்ரி ஆகிவிட்டார்கள். தி.மு.க-வில் சில உறுப்பினர்கள் ஸ்டாலின் வருகைக்காக எம்.எல்.ஏ-க்கள் செல்லும் வாயிலின் வெளியே காத்திருந்தனர். 10.50 மணிக்கு கோட்டைக்குள் நுழைந்த ஸ்டாலினின் கார், முதல்வர் செல்லும் வாயிலின் அருகே நின்றது. காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் செல்லும் சிறப்பு வாயிலின் வழியாகச் சென்றார். அவருக்குத் தனி வழி என்பதை லேட்டாக அறிந்த தி.மு.க உறுப்பினர்கள், அவசர அவசரமாக உறுப்பினர்கள் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றனர். ஸ்டாலின் சட்டசபைக்குள் நுழைந்தபோது, தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளே வருவதற்குப் போதிய வசதிகள் செய்யபட்டுள்ளனவா என்பதைப் பார்த்துவிட்டுத்தான் சபைக்குள் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்