ஜெயலலிதா மாறிவிட்டாரா?

புரியாமல் போன புரோட்டோகால் விவகாரம்!

ரசியல், அதிகாரம் என்பனவற்றின் குறியீடு நாற்காலி. அதனால்தான், தேர்தல் ஓய்ந்தபிறகும்கூட, நாற்காலிக்கான சர்ச்சை தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.  

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி, ஜெயலலிதாவும் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். 4 முறை வெற்றிபெற்று, முதலமைச்சரான ஜெயலலிதா, இரண்டு முறை வழக்குகளில் சிக்கிப் பதவியை இழந்தார். அந்த வழக்குகளில் இருந்து விடுதலையாகி மீண்டும் பொறுப்புக்குத் திரும்பியவர் என்ற முறையில், இதுவரை ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா 6 முறை நடைபெற்றுள்ளது. அவற்றில், இரண்டு முறை மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த இரண்டு முறையும் நாற்காலி, பின்வரிசை சர்ச்சை எழுந்து அடங்கி உள்ளது.

கடந்த 23-ம் தேதி, சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சி பிரிவில், 12-வது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த அரசுப் பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலா, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளான பிரபாவதி, பிரபாவதியின் கணவர் டாக்டர் சிவக்குமார், சிவகுமார் - பிரபாவதியின் மகன் கார்த்திக் ஆகியோர் முன்வரிசையில் இருந்தார்கள்.  மதுரை ஆதீனம், ராமச்சந்திரா பல்கலைக்கழக  வெங்கடாச்சலம் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். இதைக் கண்டித்து கடுமையாக அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, “ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை” என்று கடுமையாகச் சாடியிருந்தார். கருணாநிதியின் குற்றச்சாட்டுகளை மட்டுமல்ல, கருணாநிதியையும் புறம்தள்ளி, ஒரு தன்னிலை விளக்கத்தை ஜெயலலிதா கொடுத்திருந்தார். மு.க.ஸ்டாலினை மட்டுமே மையப்படுத்தி இருந்தார். மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அவருடன் இணைந்து செயலாற்றுவேன் என்று உறுதியளித்திருந்தார். அது அரசியல். ஆனால், நாற்காலி விவகாரத்தில் உண்மை என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்