முதல்வர் பதவிக்குப் போட்டா போட்டி!

புதுச்சேரி ரகளை...

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துவிட்டபோதும் யார் முதல்வராக பதவி ஏற்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது.

புதுச்சேரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணிவைத்த காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்த என்.ஆர்.காங்கிரஸை வியூகம் அமைத்து வீழ்த்தியது. அதில் முக்கியமானது பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரும், முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மருமகனுமான நமச்சிவாயத்தை தலைவராக்கித் தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். அதற்குப் பலனாக 15 இடங்களையும், கூட்டணிக் கட்சியான தி.மு.க இரண்டு இடங்களையும் கைப்பற்றியது.

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒன்றை மட்டும் மனதில்வைத்து ஒற்றுமையாக உழைத்தார்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், வெற்றி பெற்றதும் முதல்வர் பதவிக்கு முண்டியத்துக்கொண்டு மோத ஆரம்பித்து விட்டனர். முதல் அமைச்சர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எப்போதுமே இல்லை. ஆனாலும், தேர்தலைக் கருத்தில் கொண்டே நமச்சிவாயம் தலைவராக அறிவிக்கப்பட்டார் என்பதாலும், ராகுல் காந்தியின் விருப்பத்துக்குரியவர் என்பதாலும் அவர் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராகவே வலம் வந்தார். மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளருமான நாராயணசாமி ஒரு கூட்டத்தில், “காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி அமையும்” என்று பேச, இயல்பாகவே முதல்வர் வேட்பாளர் என்ற பிம்பம் நமச்சிவாயத்துக்கு ஏற்பட்டது. ஆனால், தேர்தலுக்குப்பின் அந்த நிலைமை மாறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்