திருப்பரங்குன்றத்தில் நத்தம் விசுவநாதன்?

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான சீனிவேல், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25-ம் தேதி இயற்கை எய்தினார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் கொடுக்கப்பட்டதில் இருந்தே அவருக்கு உடல்நலம் சரியில்லை. இரண்டு முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்றார். உடல்நிலை தேறி வந்தது. ஆனாலும், கடந்த 17-ம் தேதி இரவு அவரது உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். கடந்த ஒரு வாரமாக அவர் உடல்நிலை மோசமடைந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதுகூட தெரியாத நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்தார். தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை சீனிவேலின் மகன் செல்வக்குமார்தான் வாங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்