உயிரைத் தருகிறோம்... தமிழைத் தா!

ஆனா ரூனாவின் தமிழ் முழக்கம்

‘ஒரு தனிமனிதர் ஓர் இயக்கமாகச் செயல்பட்ட வரலாறுதான் மறைந்த அருணாசலம்’ என்றே தமிழ்ச் சான்றோர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். அவர் உருவாக்கிய பெரியார் தமிழ் இசை மன்றம், ‘நந்தன்’ இதழ், தமிழ்ச் சான்றோர் பேரவை மூன்றும் பல ஆண்டுகள் அனலாகச் செயல்பட்டன. தமிழ்க் கொடை ஒன்று சாய்ந்துவிட்டது. அதன் பெயர் நா.அருணாசலம். அடையாறு மாணவர் நகலகத்தின் உரிமையாளர். அன்பாக, ஆனா ரூனா என்று அழைக்கப்பட்டவர்.

எந்த அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் மொழி என்ற ஒரு குடையின் கீழ் தமிழர்களை ஒன்றிணைக்கத் தமிழ்ச் சான்றோர் பேரவை பாடுபட்டது. தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தமிழ் இசைக்கு உயிரூட்டியது. இவரால் வளர்த்து எடுக்கப்பட்டவர்தான் கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி.

தமிழில் கல்வி வேண்டும், தமிழில் படித்தோர்க்கு வேலை வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி 1999 ஏப்ரல் 25-ம் நாள் தொடங்கிய 100 தமிழர்கள் பட்டினிப் போராட்டம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு.

தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட தமிழிசை விழா பல தமிழ்க் கலைஞர்களை அடையாளம் காட்டியது. பல கிராமியத் தமிழ்க் கலைஞர்கள் அதன்மூலமே அறியப்பட்டனர் என்று சொல்லலாம்.

ஒரு கிராமத்திலிருந்து வந்து தனிமனிதனாக உழைத்து முன்னேறி தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதன் விளைவாக தன்னை ஒரு சமூக மனிதனாக மாற்றிக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற பணிகளைச் செய்தவர் அருணாசலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்