கொலையானவர் உயிருடன் இருக்கிறாரா?

குழப்பத்தில் நெல்லை போலீஸார்!

நெல்லையில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட இளைஞர் உயிருடன் இருப்பதாகக் கிடைத்த தகவலால் குழம்பிப் போய் இருக்கும் போலீஸார், அவரைத் தேடி வரும் சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

நெல்லை மாநகரை அடுத்துள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைராஜ். கட்டுமான வேலைக்குச் சென்று வந்த 27 வயது இளைஞரான அவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை, பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் பயந்துபோன மாணவியும் அதனை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நெல்லையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், சுடலைராஜ் திடீரென தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த 9-ம் தேதி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கொலையானவர் அணிந்திருந்த உடை சுடலைராஜுடையது என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்தனர். அத்துடன் சட்டைப்பையில் இருந்த செல்போன், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை மூலமாகவும் கொல்லப்பட்டது சுடலைராஜ் என்பதை உறவினர்கள் உறுதிசெய்தனர். இதனால் அந்த உடலை எடுத்துச்சென்று புதைத்தனர். பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் அவரது உறவினர்கள் யாராவது, சுடலைராஜை மதுகுடிக்க அழைத்துச் சென்று கொலை செய்து இருக்கக்கூடும் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்