பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!

தாறுமாறு தனியார் பள்ளிகள்

ந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்திப் பெற்றோர்களைக் கதறவிடுகின்றன, தனியார் பள்ளிகள். இந்தக் கொள்ளையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டாரா என்று முதல்வர் ஜெயலலிதாவை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.

“சிங்காரவேலர் கமிட்டியின் கட்டண நிர்ணயம், 2015 - 2016-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. 2016-17-ம் ஆண்டுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், பழைய கட்டணங்களையே பள்ளிகள் வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என அநியாயமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதுவரை பணம் கட்டாதீர்கள் என்று பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறோம். கூடுதல் கட்டண வசூலை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் பிரச்னை வெடிக்கும்” என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு மாநில பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான அருமைநாதன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்