உயர்த்தியது 65 சதவிகிதம்... குறைத்தது 10 சதவிகிதம்!

100 யூனிட் இலவச மின்சாரம்

‘‘மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால், தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் அனைவரும் பயனடைவதுடன், தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை’’ - அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதி இது. 

2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மே 23-ம் தேதி, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தன்னுடைய முதல் கையெழுத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவு அனைத்து வீடுகளுக்கும் பொருந்துமா அல்லது 100 யூனிட் மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தும் 78 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் உதவுமா என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது. பொதுமக்களுக்கு மட்டுமல்ல... மின்வாரிய அதிகாரிகளுக்கும் குழப்பம் இருந்தது.

மேலிடத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டதும், ‘அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ... அதற்கேற்றவாறு திட்டத்தை உருவாக்குங்கள்’ என்று உத்தரவு வந்தது. அதன்பிறகுதான், தற்போது வழக்கத்தில் உள்ள மின்கட்டண கணக்கீட்டில் சில மாற்றங்களைச் செய்து, புதிய மின்கட்டணத்தை அறிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்