டாக்டர் கனவை சிதைக்கும் நுழைவுத்தேர்வு

கிராமத்து மாணவர்களை காக்குமா அரசு?

‘‘அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வின்றி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தனியே சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்தார் முதல்வர் ஜெயலலிதா. ‘‘ஓராண்டுக்கு மட்டுமின்றி, மருத்துவப் பொது நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதும் சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளது. ஆனாலும், நுழைவுத்தேர்வு பிரச்னை தலைமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி விவரிக்கிறார் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி. ‘‘தமிழகத்தில் தற்போது ப்ளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு அகில இந்திய நுழைவுத்தேர்வு என்று அறிவித்து இருந்தாலும் எதிர்ப்பின் காரணமாக விதிவிலக்கு என்று அதற்கான அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்தில் தெளிவாக, இந்த ஆண்டு 2016 - 2017 மட்டும் விதிவிலக்கு என்பதோடு மட்டும் நில்லாமல் இந்திய மருத்துவக் கவுன்சில் 1956 சட்டத்தில் 10-டி என்னும் திருத்தத்தைச் செய்துள்ளது. இதன்படி இனிவரும் ஆண்டுகளில் கட்டாயம் அகில இந்திய நுழைவுத்தேர்வு இருக்கும். ஆக, உச்ச நீதிமன்ற உத்தரவை அப்படியே ஏற்று அடுத்த ஆண்டு அகில இந்திய நுழைவுத்தேர்வு  நடைபெறும் என்றுதான் சட்ட விதிகள் சொல்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்